November 30, 2017 தண்டோரா குழு
கோவையில் விதிமீறி வைக்கப்பட்ட கட்அவுட், பேனர்களை அகற்ற சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோவையில் எம்.ஜி.ஆர்.நூற்றாண்டு விழா டிசம்பர் 3ம் தேதி நடைபெறவுள்ளது.இதற்காக நகரில் பல்வேறு இடங்களில் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் மென் பொறியாளர் ரகு என்பவர் கடந்த சில நாட்களுக்கு முன் பேனர் மோதி உயிரிழந்தார். இதற்காக சமூக வலைத்தளங்களில் மக்கள் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.
இதையடுத்து, ரகு மரணம் அடைந்தது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் கோவை சிங்காநல்லூர் எம்.எல்.ஏ.நா.கார்த்திக் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.அதில் நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தாத அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த வழக்கை இன்று விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம்
கோவையில் விதிமீறி வைக்கப்பட்ட கட்அவுட், பேனர்களை அகற்ற உத்திரவிட்டுள்ளது.