November 30, 2017 தண்டோரா குழு
கோவையில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா அலங்கார வளைவினால் உயிரிழந்த ரகுபதி குடும்பத்திற்கு கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளார் ஈஸ்வரன் இன்று நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
“கோவையில் சாலைகளில் வைக்கப்பட்டிருந்த அலங்கார வளைவுகளால் உயிரிழப்பு ஏற்படுத்தியுள்ளது ஆடம்பர அரசியலின் உச்சக்கட்டம்.இந்த சம்பவத்திற்கு பிறகாவது தமிழக அரசு சாலைகளில் விளம்பர பேனர்கள் வைப்பதை தடுத்து நிறுத்த வேண்டும்.
தமிழக அரசு,பேனர் விவகாரத்தில் நீதிமன்ற உத்தரவை முழுமையாக அமல்படுத்த வேண்டும்.ஆர்.கே.நகர். தொகுதியில் பணம் பட்டுவாடவை முழுமையாக தேர்தல் ஆணையம் தடுத்ததாக தெரியவில்லை.ஆனால், ஓட்டுக்கு எவ்வளவு பணம் கொடுத்தாலும் திமுக வேட்பாளர் தான் வெற்றிப்பெறுவார்.எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா அதிக செலவில் நடத்துவதை மக்கள் விரும்புவதில்லை என்பதை ஆளுங்கட்சி புரிந்துக்கொள்ள வேண்டும்.மேலும், மலேசியா மணல் விவகாரத்தில் மேல்முறையீடு செய்யாமல், வெளிநாடுகளில் இருந்து மணலை இறக்குமதி செய்ய தமிழக அரசு முன்வர வேண்டும்”.இவ்வாறு அவர் கூறினார்