• Download mobile app
29 Nov 2024, FridayEdition - 3215
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கமல் சார், நான் சாவதற்குள் உங்களை ஒரு முறையாவது பார்க்க வேண்டும் – எச்ஐவி நோயாளியின்ஆசை !

December 1, 2017 தண்டோரா குழு

மனிதனை இயற்கையாக தாக்கும் பல நோய்களில் புற்றுநோய், நீரிழிவு, இருதய பாதிப்பு, காமாலை, சிறுநீரக பாதிப்பு ஆகியவை முக்கிய இடம் வகிக்கிறது. இந்த நோய்களை எல்லாம் குணமாக்க உலகளவில் நவீன மருந்துகள் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. ஆனால்,அதே மனிதனின் வாழ்நாள் முடியும் வரை குணமாக்க முடியாத நோயாக விளங்கும் எய்ட்ஸ்க்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை.

உலகத்தில் HIV பாஸிடிவ் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகமாக இருப்பவர்கள் பட்டியலில், இந்தியாவுக்கு மூன்றாவது இடம்.ஆக இந்தியாவில் மொத்தம் 21 லட்சம் மக்கள் HIV-யால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.
பலருடன் தகாத உறவு கொள்வதின் மூலம் தொற்றி கொள்ளும் எச்ஐவி, அதன் பாதிப்பை ஏற்றவருக்கு மட்டும் பிரச்னையாக இல்லாமல், ஒட்டு மொத்த குடும்பத்தினரையும் பாதிக்கின்றது.

இதனால் அவர்கள் சமூகத்தில் ஒதுக்கப்படுவதுடன், உடல் கோளாறுகளாலும், வறுமையாலும் வாடும் நிலையை ஏற்படுத்துகிறது.எச்ஐவி பெரும்பாலும் பால்வினை நோயே.ஆனால் பயந்து வெறுக்ககூடியஒரு வியாதியல்ல.எச்ஐவி தொட்டால் ஒட்டிக் கொள்ளாது. இது இரத்ததானம், விந்து இவற்றால் பரவும் நோய்.உணவு,டாய்லெட்,காற்று,நீர்,கொசு,மூலம் எல்லாம்எச்ஐவி பரவுவதில்லை.

சிகிச்சை இல்லாவிட்டாலும் பரவாயில்லை அந்நோயால் பாதிக்கபட்டவர்கள் இந்த சமூகத்தாலும் புறக்கணிக்கப்படுவதுதான் கொடுமையோ கொடுமை!நோயால் பாதிக்கப்பட்டும் மனதில் தைரியம் இருந்தாலும் அவர்களும் மனிதர்கள் தான் என்று பார்க்காமல் இந்த சமூகம் பார்க்கும் கோரப்பார்வையில் சிக்கி அதில் இருந்து எப்படி தப்பிப்பது என்று தெரியாமல் பாதிக்கப்பட்ட பலர் தற்கொலை செய்யும் நிலைக்கு தள்ளப்படுகிறார்கள் என்பதே வேதனை.

அப்படியென்றால், HIV-யால் பாதிக்கப்பட்டால், சாதாரண குடும்ப வாழ்க்கையை வாழ முடியாதா? எய்ட்ஸ் நோயாளிகளும் மனிதர்களே! அவர்களுக்கும் சாதரண மனிதர்கள்போல் குடும்பம் குழந்தை பணி என்று சமூகத்தில் அந்தஸ்தோடு வாழ வேண்டும் என்கிற ஆசை இருக்கும். அப்படி சமூகம் புறக்கணித்தாலும் தனக்கு வந்த இந்நோய் இனி யாருக்கும் வரக்கூடாது என்று பலரும் விழிப்புணர்வு கொடுத்து வருகிறார்கள். சாகின்ற நாட்கள் தெரிந்தால் வாழ்கின்ற நாட்களும் சந்தோசம் இருக்காது என்று சொல்வார்களே அதுபோல் இந்நோயால் பாதிக்கபட்டவர்களுக்கும் ஏதேனும் ஒரு குறை இருந்து கொண்டே இருக்கும்.

அப்படி, இந்நோயால் பாதிகப்பட்டு இறுதி நாளை நினைத்து கொண்டு வாழ்ந்து வருகிறார் கோவை கணபதியை சேர்ந்த மாலா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). திருமணமான 5 மாதத்தில் கணவனின் மூலம் எச்ஐவிஎன்னும் கொடிய நோயை வாங்கி கொண்டார். அதன் பின் கணவரும் இறந்துவிட்டார். என்ன செய்வது என்று யாரிடம் சொல்வது இந்த சமூக என்ன சொல்லுமோ என்று தெரியாமல் பல முறை தற்கொலை முயற்சியும் செய்துள்ளார். ஆனாலும் தற்போது உள்ள அறிவியல் வளர்ச்சியில் கருவில் இருக்கும்போதே தன் குழந்தையை அந்நோயின் பிடியில் இருந்து காப்பாற்றியுள்ளார். எனினும் இந்நோயை பற்றி இன்றைக்கும் பலருக்கும் விழிப்புணர்வு கொடுத்து வருகிறார்.

தன் மரணம் எப்படி இருக்கும் என்று தெரிந்த இவருக்கும் எப்படியாவது நிறைவேறாதா என்று சொல்லும் அளவிற்கு ஒரு ஆசை இருக்கிறதாம்.

அது என்ன ஆசை அவரிடமே கேட்போம்,

எனக்கு 2002ம் ஆண்டும் எய்ட்ஸ் இருப்பது தெரியவந்தது. நோய் இருப்பது தெரிந்தும் ஒரு கனம் என் இதயம் நொறுங்கிவிட்டது. என் வாழ்க்கை முடிந்து விட்டது போல் ஒரு உணர்வு வந்துவிட்டது. உறவினர்களும் மெல்ல மெல்ல விலகிவிட்டனர்.

யாரும் இல்லாத வாழ்க்கை வறுமை ஒருபுறம் இருக்க மறுபுறம் அக்கம் பக்கத்தினரும் சமூகமும் பார்க்கும் பார்வையும் பேசும்பேச்சும் நோயை விடஎனக்கு வலியை ஏற்படுத்தியது. என்னை போல் இந்நோயால் பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்தி பார்க்கும் இந்த சமூகத்தில் நாங்கள் தினந்தோரும் கிண்டல் கேலிக்கு ஆளாகிக்கொண்டு தான் இருக்கிறோம்.

இந்நோய் இருப்பவர்களை இன்னும் பலர் மனிதர்களை போல் பார்ப்பதில்லை என்பதே மனதிற்கு கஷ்டமாக இருக்கிறது.இந்நோயும் என் மகளின் வாழ்கையும் எப்படி இருக்க போகிறதே என்ற கவலை எனக்கு இருந்தாலும் எனக்கும் என் மூச்சு அடங்குவதற்குள் நிறைவேறுமா? என்ற ஆசை உள்ளது.

சிறுவயதில் இருந்து நான் உலக நாயகன் கமலில் தீவிர ரசிகை அவரை டீவியில் பார்த்தாலே எனக்கு அப்படி ஒரு ஆனந்தம் ஏற்படும். எப்படியும் படுத்தப்படுக்கையாக தான் என் உயிர் போக போன்றது. அப்படி என் கடைசி மூச்சு நிற்பதற்குள் நான் உலகநாயகனை நேரில் பார்த்தவிட வேண்டும். அவரின் கால்கள் என் வீட்டில் படவேண்டும். அவர்களை பார்த்து கட்டியணைத்து கண்ணீர் விட்டாலே எனக்கு இந்நோய்இருப்பதையே நான் மறந்துவிடுவேன்.

கமல் சார்! ஒருமுறையாவது என் வீட்டிற்கு வாங்க ….என்று தன் ஆசை சொல்லி முடித்தார். நோயின் வலியையும் சமூகத்தின் பார்வையையும் பற்றி சொல்லும் போது கண்ணீருடன் தான்
பேசினார்.ஆனால்,கமலை பற்றி பேசும்போது தன் கவலைகளை எல்லாம் மறந்து சின்ன குழந்தை போல் மாறியது ஆச்சரியமளிக்கிறது.இந்த அளவிற்கு கமலுக்கு ஒரு ரசிகையா என்று.தன் மரணத்தின் நிலையை அறிந்து அதைப்பற்றி கவலை கொள்ளாமல் கமலை சந்திக்க வேண்டும் என்ற இவரின் இறுதி ஆசையை நிறைவேற்றுவாரா உலகநாயகன் கமல்?

மேலும் படிக்க