• Download mobile app
29 Nov 2024, FridayEdition - 3215
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் வீட்டிற்குள் புகுந்த யானை!…

December 1, 2017 தண்டோரா குழு

கோவை,பாப்பநாயக்கன்பாளைத்தில் நேற்று இரவு(நவ 30) வீட்டிற்குள் யானை புகுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை அடுத்த சின்னதடாகம் பாப்பநாயக்கன்பாளைத்திலுள்ள நரசிம்மராஜ் என்பவரின் வீட்டிற்குள் உணவிற்காக யானை மற்றும் குட்டி யானை புகுந்து அங்கே தேடி பார்த்த காட்சி அந்த வீட்டில் இருந்த சி.சி.டி.வி கேமராவில் பதிவானது.

கோவை அனுவாவி சுப்பிரமணிய சுவாமி கோவில் மலைபகுதி, ஆனைக்கட்டி மலைப்பகுதி, பொன்னுத்து அம்மன் கோவில் மலைப்பகுதி ஆகிய மலைப்பகுதியில் 50க்கும் மேற்பட்ட காட்டுயானைகள் உள்ளன.

இந்த யானைகள் அவ்வப்போது, விவசாய விலை நிலங்களில் புகுந்து வாழை, கரும்பு, தென்னை மற்றும் பயிர் வகைகளை தின்று சேதப்படுத்தி வருகிறது. சில சமயங்களில் ஊருக்குள் புகுந்து ரேசன் கடைகளை உடைத்து அரிசி, பருப்பு, உப்பு போன்ற உணவு பொருட்களை தின்றும் சேதப்படுத்தி வருகிறது.

இந்நிலையில் கடந்த 26ம் தேதி 2 யானைகளுடன் ஒரு குட்டி யானையும் வந்தது. இந்த யானைகள் சோமையம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட ஆசிரியர் காலனி, கணுவாய் கல் குழி அருகே வந்து அங்குள்ள தண்ணீரை குடிக்க வந்தது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் அந்த யானைகளை விரட்டினர்.

மீண்டும் மலைப்பகுதிக்கு சென்ற யானைகள் மாலையானதும் திரும்ப ஊருக்குள் புகுந்து விடுகிறது. இந்நிலையில் நேற்று இரவு சின்னதடாகம் பாப்பநாயக்கன்பாளைத்திலுள்ள நரசிம்மராஜ் என்பவரின் வீட்டிற்குள்ளேயே உணவிற்காக யானை மற்றும் குட்டி யானை புகுந்தது.

அதேபோல மீண்டும் கணுவாய் கல்லுகுழி பகுதியில் 3 யானைகளும் சுற்றி திரிந்து வருகிறது. இது குறித்து வனத்துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுத்து யானைகளை மீண்டும் மலைப்பகுதிக்கு விரட்ட வேண்டும் என்று அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறி வருகின்றனர்.

மேலும் படிக்க