December 1, 2017 தண்டோரா குழு
சி.ஆர்.ஐ. பம்ப்ஸ் நிறுவனம் சி.ஆர்.ஐ. பந்தன் என்ற திட்டத்தின் மூலம் தனது மெக்கானிக் மற்றும் பிளம்பர்களை கெளரவித்துள்ளது.
சி.ஆர்.ஐ. பம்ப்ஸ் நிறுவனம் சி.ஆர்.ஐ. பந்தன் என்ற திட்டத்தை கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தியது. இத்திட்டம், குறிப்பிட்ட சிஆர்ஐ பொருட்களை அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தர் மற்றும் விற்பனையாளர்களிடமிருந்து வாங்க பரிந்துரைத்த மெக்கானிக்குகள் மற்றும் பிளம்பர்கள் ஆகியோருக்காக அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்த திட்டத்தின் கீழ், சிறப்பாக செயலாற்றியவர்களுக்கான விருதுகளும், அதிர்ஷ்ட குலுக்கலும் நடத்தப்பட்டன.அதிர்ஷ்ட குலுக்கல் தகுதிக்கு குறைந்த பட்சம் 10,000 புள்ளிகளாக நிர்ணயிக்கப்பட்டது.
இந்நிலையில், கோவையில் நடைபெற்ற விழாவில், பம்பர் பரிசுகளின் (ஒரு புதிய மாருதி ஆல்டோ 800 கார், டிவிஎஸ் அப்பாசி மற்றும் ஹீரோ கிளாமர் பைக்குகள்)வெற்றியாளர்கள் பெயர் இன்று அறிவிக்கப்பட்டது.
இவ்விழாவில் சி.ஆர்.ஐ பம்புகள் மார்க்கெட்டிங் துணைத் தலைவர் ஆர்.பூபதி, மற்றும் இணை துணைத் தலைவர் சி.குமார்,ஆகியோர் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு பொருட்களை வழங்கினர். இந்த அதிர்ஷ்ட குலுக்கலில் 40000க்கும் மேற்பட்ட மெக்கானிக்குகள் மற்றும் பிளம்பர்கள் கலந்துக் கொண்டனர்.
அதிர்ஷ்ட குலுக்கலின் வெற்றியாளர்களை தேர்ந்தெடுத்து அவர்கள் பேசுகையில்,
சி.ஆர்.ஐ. பந்தன் திட்டம் எங்களுடைய மெக்கானிக் மற்றும் பிளம்பர்களை ஊக்கப்படுத்த உருவாக்கிய ஒரு திட்டம். இது போன்று மேலும் பல மதிப்புக்கூட்டு சேவையை தொடர்ந்து வழங்குவதில் சி.ஆர்.ஐ. நிறுவனம் உறுதியாக உள்ளது.
உலகளவில் முதன்மையாக உள்ள சி.ஆர்.ஐ. நிறுவனம் தற்போது நீர்மேலாண்மை சிஸ்டம்களில் வழுவான நிலையை தமது பம்பு, பைப்பு, சோலார், வால்வுகள், வயர்கள் மற்றும் கேபிள்கள் மூலம் அடைந்துள்ளது.
வாடிக்கையாளர் சேவை, புதுமையான படைப்புகள் மற்றும் சிறந்த விற்பனைக்கு பின் சேவை போன்றவையினால் சி.ஆர்.ஐ. தற்போது உலகெங்கும் உள்ள வாடிக்கையாளர்களின் விருப்பமான ஒரு பிராண்டாக அமைந்துள்ளது.
மேலும், எங்களுடைய டீலர், மெக்கானிக் மற்றும் பிளம்பர்களை கவுரவிப்பது மட்டுமல்லாமல் மெக்கானிக்குகளுக்கென்று அவர்கள் திறன் மேம்படுத்தி வாழ்வில் முன்னேருவதற்கென்று சிறப்பு பயிற்சி மற்றும் திறன் மேம்படுத்துவதற்கான வகுப்புகள், அவர்களுக்கான மொபைல் ஆப்-கள்; கொண்டு கணக்குகள் அறிந்து கொள்வது மற்றும் அவர்களுக்கு தேவையான கருவிகளை வழங்கி வருகிறோம் என்றனர்.
சி.ஆர்.ஐ. பந்தன் என்ற திட்டத்தில் மாருதி ஆல்டோ காரை திருப்பூரை சேர்ந்த, விகா மோட்டார் ஏஜென்சி எம்.பாலசுப்பிரமணியமும், டி.வி.அஸ். அப்பாச்சி இரண்டு சக்கர வாகனத்தை பீகார் மாநிலம், கயா மாவட்டத்தை சேர்ந்த ஜெய் பாலா டிரேடர்ஸ், குட்டு குமாரும்,ஹீரோ கிளமர் வாகனத்தை உத்திரபிரதேசம், சலோன் மாவட்டத்தை சேர்ந்த சிங் மெஷினரி ஸ்டோர்ஸ் கருணேஷ் பர்டாப் சிங் ஆகியோரும் வென்றனர்.