December 1, 2017 தண்டோரா குழு
ரகு மரணத்திற்கு பேனர் காரணமல்ல என கோவை விமான நிலையத்தில் முதலமைச்சர் பழனிசாமி பேட்டியளித்துள்ளார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
“கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் போர்கால அடிப்படையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.மழையால் பாதிக்கப்பட்ட மக்கள் பாதுகாப்பாக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
நிவாரணப்பணிகளை மேற்கொள்ள 4 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.அரசு மீது எந்த குற்றமும் கண்டுபிடிக்க முடியாததால் ஸ்டாலின் விரக்தியில் பேசுகிறார்.ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளருக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. டிசம்பர் 6 முதல் ஆர்.கே நகரில் பரப்புரையை தொடங்க உள்ளோம்.
மேலும்,இளைஞர் ரகு விபத்தில் உயிரிழந்தது வேதனை அளிக்கிறது.ரகு மரணத்திற்கு பேனர் காரணமல்ல. சிசிடிவி காட்சிகளை நீதிமன்றத்தில் அளித்துள்ளோம். கோவை இளைஞர் ரகு மரணம் குறித்து பொய்யான தகவலை எதிர்கட்சிகள் பரப்பி வருகின்றன”இவ்வாறு அவர் கூறினார்.