December 2, 2017
tamilsamayam.com
உலக ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய ஆடவர் அணி காலிறுதியில் தோற்று வெளியேறியது.
பிரான்ஸ் நாட்டின் மார்செய்லி நகரில் உலக ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற ஆடவர் பிரிவு காலிறுதியில் இந்திய அணி இங்கிலாந்து அணியை சந்தித்தது. இந்தியாவின் சவுரவ் கோஷால், திக் மேத்யூவிடம் 11-6, 6-11,11-7, 10-12, 11-9 என்ற செட்களில் தோல்வியைத் தழுவினார்.
ஹரிந்தர் பால் சந்து அடுத்த போட்டியில் இங்கிலாந்தின் டரில் செல்பையை எதிர்த்து களமிறங்கினார். இதில், 11-2, 11-4, 11-2 என்ற செட்களில் ஹிரிந்தார் வெற்றி பெற்றார். இதனால் இரு அணிகளும் 1–1 என சம நிலையை எட்டின.
கடைசி போட்டியில் இந்திய வீரர் விக்ரம் மல்ஹோத்ரா இங்கிலாந்தின் ஜேம்ஸ் வில்ஸ்ட்ராப்புடன் மோதினார். இதில் விக்ரம் 11-4, 9-11, 11-8 என்ற செட்களில் வில்ஸ்ட்ராப்பிடம் வீழ்ந்தார். இதன் மூலம் இங்கிலாந்து அணி 2–1 என வெற்றி பெற்று அரையிறுதியில் அடியெடுத்து வைத்தது.