• Download mobile app
29 Nov 2024, FridayEdition - 3215
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கன்னியாகுமரியில் தொற்று நோய் பரவாமல் தடுக்க முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன – விஜயபாஸ்கர்

December 2, 2017

கன்னியாகுமரி மாவட்டத்தில் புயல் மற்றும் மழை காரணமாக தொற்று நோய் பரவாமல் தடுக்க எடுக்க வேண்டிய அனைத்து முன்னேற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் இணை இயக்குனர் மருத்துவர் வடிவேல் தலைமையில் தொற்றுநோய் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.வெள்ளம் ஏற்படாத பகுதிகளிலிருந்த நடமாடும் மருத்துவ குழுக்கள் கன்னியாகுமரிக்கு அனுப்பப்பட்டுள்ளது.

மேலும்,முதுநிலை மாணவர்கள் மேற்கொண்டுள்ள போராட்டம் நியாயமற்றது.படிப்பை முடிக்க 9 மாதங்கள் உள்ள நிலையில், தற்போதே பணியை நியமனம் செய்யுங்கள் என்று சொல்வது ஏற்றுக்கொள்ள முடியாது.

பல்வேறு மருத்துவமனைகளில் வெளிப்படையான கலந்தாய்வு மூலமாகவே நியமனம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.அமைச்சர்கள், மக்கள் பிரதிநிதிகள், ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மழை பாதிப்புகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகிறார்கள்.

கோவை அரசு மருத்துவக்கல்லூரியில் ரூ 282கோடி ரூபாய் செலவில் உட்கட்டமைப்பை மேம்படுத்த ஒதுக்கப்பட்டுள்ளது.தமிழகம் முழுவதும் உள்ள இரண்டாம் தர அரசு மருத்துவமனைகளில் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளவும், 15கோடி ரூபாய் மதிப்பில் புற்றுநோய்க்கு அதிநவீன கருவிகள் மட்டுமின்றி புற்றுநோய்க்கான மண்டல மையாமாக கோவை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

மேலும் படிக்க