December 2, 2017
தண்டோரா குழு
உலகநாயகன் கமல்ஹாசனின் மகளும் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் பிசியாக நடித்துவந்தவருமான நடிகை ஸ்ருதிஹாசன் தற்போது பட வாய்ப்புகள் ஏதுமில்லாமல் உள்ளார்.
இதற்கிடையில்,அவர் லண்டனைச் சேர்ந்த மைக்கேல் கார்சலை காதலிப்பதாக செய்திகள் வெளியாகின. இந்நிலையில் சமீபத்தில் அவர் தனது காதலரை தன் அம்மாவான சரிகாவிடம் அறிமுகம் செய்து வைத்துள்ளார். சரிகாவும், பூங்கொத்து கொடுத்து அவரை வரவேற்றுள்ளார்.
இந்நிலையில், இது ஸ்ருதியின் திருமணம் குறித்து நடந்த சந்திப்பு என்றும், விரைவில் திருமணம் நடைபெறும் என்றும் கூறப்படுகிறது.