March 11, 2016 வெங்கி சதீஷ்
உலகளவில் மனிதனாக வாழ்ந்துவரும் அனைத்து ஆண்களும் பெண்களைக் கண்டு பொறாமைப்படுகிறார்கள் என்றால் அது ஒரே ஒரு நிலைக்காகத்தான். அதுதான் தாய்மை.
குழந்தையைக் கருவில் சுமப்பது வெளியே ஆயிரம் கஷ்டமான காரியமாகத் தெரிந்தாலும் உள்ளுக்குள் குழந்தையின் அசைவு மற்றும் அதன் நுக்குமான வளர்ச்சி ஆகியவற்றை அனுபவிக்கும் தாய்மார்களுக்கு உள்ள ஒரு உன்னதமான நிலை எந்த ஒரு ஆணுக்கும் இருப்பதில்லை.
பெண் தாய்மை அடையும் பொது எந்த அளவிற்குப் பெருமை அடைகிறாளோ அதே அளவிற்கு ஆணும் தந்தை என்ற நிலையை அடையும்போது பெருமை அடைவான் ஆனால் அந்த ஸ்பரிசம், உணர்வு, உணவை உண்டவுடன் அது ஒத்துக்கொண்டாலும் ஒத்துக்கொள்ளாவிட்டாலும் குழந்தை தரும் செயல்பாடுகள் ஒரு தாய்க்கு மட்டுமே தெரியும்.
இது தான் ஆண்களுக்குப் பெண்கள் மீது பொறாமையை ஏற்படுத்துகிறது. ஆனால் அந்த உணர்வுகளை ஆண்கள் உணர்ந்தால் எப்படி இருக்கும் என நினைத்து ஒரு கருவி உருவாக்கப்பட்டது. அதில் கர்ப்பிணிப் பெண் வயிற்றில் பொருத்தப்பட்டிருக்கும் ஒரு கருவி குழந்தையின் இயக்கத்திற்கு ஏற்ப தந்தையின் வயிற்றில் கட்டப்பட்ட ஒரு கருவியை இயக்கம்.
இதன்மூலம் பெண்களுக்கு ஏற்படும் உணர்வுகளில் பாதி அளவிற்கு அந்த அனுபவத்தைப் பெறமுடியும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதைச் சோதனை செய்த பொது கணவர்களின் முகத்தில் ஏற்பட்ட மாற்றங்களை வீடியோவாக தற்போது பார்ப்போம்.