December 4, 2017 tamil.boldsky.com
தேவையான பொருட்கள்:
தினை – 1/2 கப்
அரிசி மாவு – 2 டேபிள் ஸ்பூன்
தேங்காய் – 2 டேபிள் ஸ்பூன் (துருவியது)
நாட்டுச்சர்ச்சரை – 4 டேபிள் ஸ்பூன்
தண்ணீர் – தேவையான அளவு
ஏலக்காய் பொடி – 1/4 டீஸ்பூன்
பேக்கிங் சோடா – 1 சிட்டிகை
நல்லெண்ணெய் – தேவையான அளவு
உப்பு – 1 சிட்டிகை
செய்முறை:
முதலில் தினையை நீரில் போட்டு 1 மணிநேரம் ஊற வைத்து, கழுவிக் கொள்ள வேண்டும். பின் ஒரு பாத்திரத்தில் 1/4 கப் தண்ணீர் ஊற்றி, அதில் நாட்டுச்சர்க்கரையை சேர்த்து அடுப்பில் வைத்து, ஓரளவு கெட்டியான பாகு தயார் செய்து, வடிகட்டி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் தினையை மிக்ஸியில் போட்டு, சிறிது தண்ணீர் ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும். பிறகு அரைத்து வைத்துள்ள தினை பேஸ்ட்டை ஒரு பௌலில் போட்டு, அத்துடன் அரிசி மாவு, தேங்காய், வெல்லப் பாகு, உப்பு மற்றும் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்கு கலந்து, 3 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்பு அதில் பேக்கிங் சோடாவை சேர்த்து நன்கு கிளறி, தோசை மாவு பதத்திற்கு கலந்து கொள்ள வேண்டும். அடுத்து பணியாரக் கல்லை அடுப்பில் வைத்து சூடானதும், அதில் நல்லெண்ணெயை தடவி, பணியார மாவை ஊற்றி, மூடி வைத்து முன்னும் பின்னும் வேக வைத்து எடுத்தால், இனிப்பான தினை பணியாரம் ரெடி!!!