December 4, 2017
கோவையில் முதுநிலை மருத்துவர்கள் வாயில் கறுப்பு துணி கட்டி மாவட்ட ஆட்சியரிடம் மனு இன்று(டிச 4)மனு அளித்தனர்.
அரசு சாரா மருத்துவர்களுக்கு வழங்கப்பட்ட 465 காலி பணியிடங்களை,காலிப்பணியிடமாக அறிவிக்க வலியுறித்தி கடந்த 18 நாட்களாக போராட்டம் நடைபெற்று வருகிறது.இந்நிலையில் கோவையில் முதுநிலை மருத்துவர்கள் வாயில் கறுப்பு துணி கட்டி மாவட்ட ஆட்சியரிடம் இன்று
(டிச 4) மனு அளித்தனர்.
தமிழ்நாடு முதுநிலை மருத்துவ மாணவர்கள் மருத்துவ காலிப் பணியிடங்களுக்கு தேர்வு மற்றும் கலந்தாய்வு நடத்தாமல் நேர்முகத் தேர்வு நடத்தி அரசு சாரா மருத்துவர்களை கொண்டு பணியிடத்தை நிரப்பியதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாநிலம் முழுவதும் கடந்த 18 நாட்களாக போராட்டம் நடந்து வருகின்றது.
இந்நிலையில்,கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் கடந்த 5 நாட்களாக நூற்றுக்கும் மேற்பட்ட முதுநிலை மருத்துவ மாணவர்கள் பணியை புறக்கணித்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக இன்று மருத்துவர்கள் வாயில் கருப்பு துணி கட்டி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
மேலும்,அரசு மருத்துவமனைகளில் பணியாற்றி வரும் அனுபவம் பெற்ற அரசு
மருத்துவர்களுக்கும்,அரசு முதுநிலை மருத்துவ மாணவர்களுக்கும் பணி மாறுதல் கலந்தாய்விலும், பணி நியமனத்திலும் முன்னுரிமை அளிக்கப்படுவது வழக்கம் எனவும் அதனைக் கருத்தில் கொண்டு தற்போது முடிவடைந்த பணி நியமனத்தை ரத்து செய்து வெளிப்படையான கலந்தாய்வு நடத்த வேண்டும் என வலியுறித்தினார்.