December 4, 2017
தண்டோரா குழு
தனி ஒருவன் படத்திற்கு பின் மோகன்ராஜா இயக்கியிருக்கும் படம் வேலைக்காரன்.சிவகார்த்திகேயன் நயன்தாரா முதல் முறையாக இணையும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
இப்படத்தின் பாடல் வெளியிட்டு விழா நேற்று நடைபெற்றது. அவ்விழாவில் பேசிய மோகன் ராஜா, சிவகார்த்திகேயன் தனிஒருவன் படம் பார்த்தபிறகு என்னை நேரில் சந்தித்து தனக்கும் அப்படி ஒரு படம் வேண்டும் என கேட்டத்தாக கூறினார். அதன் காரணமாகவே, இந்த ‘வேலைக்காரன்’படம் உருவானது எனக் கூறினார்.
மேலும் சிவகார்த்திகேயனுடன் மேலும் ஒரு படத்தில் விரைவில் இணையவுள்ளதாக இயக்குனர் மோகன் ராஜா மேடையிலேயே அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.