• Download mobile app
29 Nov 2024, FridayEdition - 3215
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஆர்.கே நகர் இடைத்தேர்தல்: விஷால் வேட்புமனு நிராகரிப்பு

December 5, 2017 தண்டோரா குழு

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட நடிகர் விஷால் தாக்கல் செய்த வேட்பு மனுவை தேர்தல் அதிகாரி நிராகரித்துள்ளார்.

ஆர்.கே.நகரில் டிசம்பர் 21ம் தேதி இடைதேர்தல் நடைப்பெறவுள்ளது. இதில், திமுக சார்பில் மருது கணேஷ், அதிமுக சார்பில் மதுசூதனன், பாஜக சார்பில் கரு.நாகராஜன் மற்றும் சுயேட்சையாக டிடிவி தினகரன், நடிகர் விஷால் உள்ளிட்ட பலர் போட்டியிடவுள்ளனர். இத்தொகுதிக்கான வேட்புமனு தாக்கல் நேற்று நிறைவடைந்தது. இதில் 139 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.இதையடுத்து இன்று வேட்பு மனு மீதான பரிசீலனை இன்று நடைபெற்று வருகிறது.

இதற்கிடையில்,நடிகர் விஷாலின் வேட்புமனு விண்ணப்பப்படிவத்தில் உள்ள கையெழுத்தில் குளறுபடி இருப்பதாக புகார் எழுந்தது. விஷாலின் வேட்பு மனுவை ஏற்க கூடாது என அதிமுக, திமுக மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் கோரிக்கை வைத்தனர்.

இதனையடுத்து நடிகர் விஷாலின் வேட்புமனு காலை பரிசீலனையின் போது நிறுத்தி வைக்கப்பட்டது.பின்னர், மாலை மீண்டும் விஷாலின் வேட்புமனு பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அப்போது, விஷாலை முன் மொழிந்து கையெழுத்திட்ட 3 பேரில் இருவரின் கையெழுத்து தவறாக இருந்ததால் அவரின் வேட்பு மனுவை தேர்தல் அதிகாரி நிராகரித்தார்.

மேலும் படிக்க