• Download mobile app
29 Nov 2024, FridayEdition - 3215
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஆளும் கட்சியினர் மிரட்டுவதாக கூறும் ஆடியோ ஆதாரத்தை வெளியிட்டார் – விஷால்

-->
December 5, 2017 தண்டோரா குழு

தன்னை முன்மொழிந்தவர்களுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டதாக கூறப்படும் ஆடியோ ஆதாரத்தை விஷால் வெளியிட்டுள்ளார்.

ஆர்.கே நகர் இடைதேர்தலில் போட்டியிடுவதற்காக நடிகர் விஷால் தாக்கல் செய்த வேட்புமனு விண்ணப்பப்படிவத்தில் உள்ள கையெழுத்தில் குளறுபடி இருப்பதாக புகார் எழுந்தது. இதனால் விஷாலின் வேட்பு மனுவை ஏற்க கூடாது என அதிமுக, திமுக மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் கோரிக்கை வைத்தனர். இதனையடுத்து நடிகர் விஷாலின் வேட்புமனு காலையில் பரிசீலனையின் போது நிறுத்திவைக்க்கப்பட்டது.பின்னர், மாலை மீண்டும் விஷாலின் வேட்புமனு பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அப்போது, விஷாலை முன் மொழிந்து கையெழுத்திட்ட இருவரின் கையெழுத்து தவறாக இருந்ததால் விஷாலின் வேட்பு மனுவை தேர்தல் அதிகாரி நிராகரித்தார்.

இந்நிலையில், ஆர்.கே.நகர் தேர்தல் நடத்தும் அலுவலகத்திற்கு வந்த நடிகர் விஷால் வேட்பு மனு நிராகரிப்பு குறித்து, தேர்தல் அலுவலர் வேலுச்சாமியுடன் விளக்கம் கேட்டறிந்தார். பின்னர், விஷால் தனது ஆதரவாளர்களுடன் சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய விஷால் தனது வேட்புமனு நிராகரிக்கப்பட்டது நியாயமே இல்லை என்றும் தன்னை முன்மொழிந்த நபர்கள் அதிமுகவினரால் மிரட்டப்படுகின்றனர் அதற்கு ஆதாரம் உள்ளது என்றும் கூறினார்.

இதையடுத்து, மிரட்டல் விடுக்கப்பட்டதாக கூறப்படும் ஆடியோ ஆதாரத்தை விஷால் வெளியிட்டார்.வேலு என்பவரிடம்பேசிய ஆடியோ ஆதாரத்தை விஷால்வெளியிட்டார்.

மேலும்,தனக்கு முன்மொழிந்தவர்களை மதுசூதனன் தரப்பினர் மிரட்டியதாக விஷால் குற்றச்சாட்டியுள்ளார்.வேட்பு மனு நிராகரிக்கப்பட்டதை அடுத்து தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு புகார் அளித்தவிஷால்ஆர்.கே.நகர் தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் எழுத்துப்பூர்வமாக புகார் அளித்தார்.

மேலும் படிக்க