December 7, 2017
பெரு நாட்டில் உள்ள மருத்துவமனை இறப்புச் சான்றிதழ் கொடுக்க தாமதமாக்கியதால் குழந்தையின் உடலை வீட்டு பிரிட்ஜில் வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெரு நாட்டைச் சேர்ந்தவர் மோனிகா பாலோமினோ.இவர் கடந்த டிசம்பர் 2ம் தேதி பிரசவத்திற்காக செர்ஜியோ பெர்னாலேஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.இந்நிலையில் கடந்த திங்கட்கிழமை சரியான வளர்ச்சியடையாமல் பிறந்த அந்த குழந்தை இறந்தது.அதன்பிறகு, மோனிகாவை மருத்துவமனையிலிருந்து இறந்த குழந்தையுடன் வீட்டிற்கு அனுப்பிவிட்டனர். அதோடு, இறந்த குழந்தைக்கு தர வேண்டிய இறப்பு சான்றிதழையும் தரவில்லை.
இந்நிலையில் வீடு திரும்பிய மோனிகா, இறந்த குழந்தையை முறைப்படி புதைக்க வேண்டுமென்றால், இறப்பு சான்றிதழ் கண்டிப்பாக தேவை. அதனால், சான்றிதழ் கிடைக்கும் வரை, இறந்த குழந்தையை வீட்டிலிருந்த குளிர்சாதன பெட்டியில் வைத்துவிட்டு, அதன் கதவில் ‘யாரும் அதை தொடக்கூடாது’ என்று எழுதி ஒட்டிவிட்டார்.
இது குறித்து மோனிகா மருத்துவமனை இயக்குநரிடம் புகார் தெரிவித்தார்.இதனையடுத்து பெண் கொடுத்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.