December 7, 2017 தண்டோரா குழு
சென்னை மணவாளநகர் பகுதியில் கூவம் ஆற்று கரையோரத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட ஏராளமான கடைகள் அகற்றப்பட்டது.
சென்னை திருவள்ளூரை அடுத்த மணவாளநகர் பகுதியில் கூவம் ஆற்று கரையோரத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகள் மற்றும் கடைகளை அகற்ற மாவட்ட ஆட்சியர் சுந்தரவல்லி உத்தரவிட்டார்.
இதனையடுத்து ஆக்கிரமித்து கட்டப்பட்ட கட்டிடங்கள் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இதில் 42 கடைகள், 302 வீடுகள் கூவம் ஆற்றை ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருப்பது தெரியவந்தது.
இந்நிலையில் இன்று(டிச 7) காலை வட்டாட்சியர் தமிழ்ச்செல்வன், பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆக்கிரமிப்பு கட்டிடங்களை அகற்றினர்.
இதில்,முதல் கட்டமாக 42 கடைகள் மட்டும் இடித்து அகற்றப்பட்டது. 302 குடும்பத்தினருக்கும் மாற்று இடம் வழங்கிய பின்னர் வீடுகள் இடிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.இதனையடுத்து
அங்கு குடியிருப்பவர்கள் பற்றிய விவரத்தை அதிகாரிகள் சேகரித்தனர்.
மேலும், கூவம் ஆற்றை ஆக்கிரமித்து கட்டிடங்கள் கட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரித்து உள்ளனர்.