December 8, 2017 தண்டோரா குழு
உலகின் புகழ்பெற்ற அறிவியல் விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், தனது நெருங்கிய நண்பருக்கு எழுதிய கடிதம் சுமார் 1,௦6,25௦ டாலருக்கு ஏலம் எடுக்கப்பட்டது.
ஜெர்மன் நாட்டை சேர்ந்த புகழ்பெற்ற அறிவியல் விஞ்ஞானி, ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், கடந்த 1916ம் ஆண்டு தன்னுடைய கண்டுபிடிப்பான “General theory of relativity” குறித்து, சுமார் நான்கு பக்கங்கள் கொண்ட அறிக்கையை, ஜெர்மனி நாட்டின் “Prussian Academy of Sciences” அகாடமியில் சமர்பித்தார்.
இதன் மூலம் தனக்கு கிடைத்த வெற்றியின் மகிழ்ச்சியை தெரிவித்து, அவருடைய நெருங்கிய நண்பர் மிச்சல் பெஸ்சோவிற்கு என்பவருக்கு கடிதம் எழுதினார். ஐன்ஸ்டீன் எழுதிய கடிதத்தை இங்கிலாந்தின் ஏல நிறுவனமான கிறிஸ்டி அந்த கடிதத்தை ஏலம்விட்டது. அந்த கடிதத்தின் உண்மையான மதிப்பு சுமார் 3௦௦௦௦ டாலர் ஆகும். ஏலத்தின்போது, அந்த கடிதம் சுமார் 1,௦6,25௦ டாலருக்கு விற்கப்பட்டது.ஏலம் போன, அந்த கடிதத்தில் பெர்லின் மற்றும் டிசம்பர் 1௦, 1915 என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
அதேபோல், அவர் தனது நண்பனுக்கு எழுதிய 63 கடிதங்களின் தொகுப்பை கிறிஸ்டி ஏல நிறுவனம் ஆன்லைன் மூலம் ஏலம்விட்டது. அந்த ஏலத்தில் அந்த கடிதம்,சுமார் 1,234,635 டாலருக்கு விற்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.