December 8, 2017 தண்டோரா குழு
சிறுமி ஹாசினி, தாயை கொலை செய்துவிட்டு தப்பி ஓடிய தஷ்வந்தை மும்பையில் போலீசார் மீண்டும் கைது செய்துள்ளனர்.
கடந்த பிப்ரவரி மாதம்சென்னை மாங்காடு பகுதியைச் சேர்ந்த 7 வயது சிறுமி ஹாசினியை கொலை, பலாத்காரம் வழக்கில் கைது செய்யப்பட்ட தஷ்வந்த் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார். ஆனால், அவர் மீதான குண்டர் சட்டம் தொடர்பாக போலீஸார் விளக்கமளிக்காததால் நீதிமன்றம் குண்டாஸ் சட்டத்தை ரத்து செய்தது. இதனையடுத்து சிறையில் இருந்து வெளியேவந்த தனது பெற்றோருடன் வசித்துவந்தார்.
இந்நிலையில்,தஷ்வந்த்தின் தாய் சரளா அவரது வீட்டில் கொலை செய்யபட்டார். வீட்டிலிருந்த நகை, பணம் கொள்ளை போயுள்ளது. தஷ்வந்தும் வீட்டில் இல்லை. இதனால், தஷ்வந்த் மீதான சந்தேகம் போலீஸுக்கு வலுத்துள்ளது. இதையடுத்து, தலைமறைவான தஸ்வந்த் சிங்கை பிடிக்க மூன்று தனிப்படை அமைத்து போலீசார் தேடி வந்தனர்.
இந்நிலையில், தாயைக் கொன்ற வழக்கில் தேடப்பட்டு வந்த தஷ்வந்தை மும்பையில்போலீசார்
கைது செய்தனர்.தாயை கொன்ற வழக்கில், மும்பையில் கைது செய்யப்பட்ட தஷ்வந்தை வரும் சனிக்கிழமை தமிழக சிறையில் அடைக்க மும்பை பாந்த்ரா நீதிமன்றம் உத்தவிட்டது.நீதிமன்ற உத்தரவையடுத்து தஷ்வந்த்நேற்று இரவு சென்னை அழைத்து வர போலீசார் ஏற்பாடுகள் செய்தனர். அப்போது,பாந்த்ராவில் இருந்து சென்னைக்கு அழைத்து வர விமான நிலையம் சென்றபோது போலீசாரை தாக்கிவிட்டு தஷ்வந்த்தப்பியோடியுள்ளார். தப்பியோடிய தஷ்வந்த்தை பிடிக்க சிறப்பு தனிப்படை அமைத்து போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.
இந்நிலையில், தப்பி சென்ற இடத்திற்கு அருகில் உள்ள அந்தேரி என்னும் இடத்தில் பதுங்கி இருந்த தஷ்வந்தை மும்பை போலீசார் இன்று கைது செய்தனர்.இதையடுத்து விரைவில் அவர் சென்னைக்கு அழைத்து வரப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.