December 9, 2017 தண்டோரா குழு
தாயை கொலை செய்த வழக்கில் தப்பி கைதான தஷ்வந்துக்கு 3 நாள் போலீஸ் காவல் வழங்கி மும்பை நீதிமன்றம் உத்திரவிட்டுள்ளது.
கடந்த பிப்ரவரி மாதம்சென்னை மாங்காடு பகுதியைச் சேர்ந்த 7 வயது சிறுமி ஹாசினியை கொலை, பலாத்காரம் வழக்கில் கைது செய்யப்பட்ட தஷ்வந்த் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார். ஆனால், அவர் மீதான குண்டர் சட்டம் தொடர்பாக போலீஸார் விளக்கமளிக்காததால் நீதிமன்றம் குண்டாஸ் சட்டத்தை ரத்து செய்தது. இதனையடுத்து சிறையில் இருந்து வெளியேவந்த தனது பெற்றோருடன் வசித்துவந்தார்.
இதற்கிடையில் தஷ்வந்த்தின் தாய் சரளா அவரது வீட்டில் கொலை செய்யபட்டார். வீட்டிலிருந்த நகை, பணம் கொள்ளை போயுள்ளது. தஷ்வந்தும் வீட்டில் இல்லை. இதனால், தஷ்வந்த் மீதான சந்தேகம் போலீஸுக்கு வலுத்துள்ளது. இதையடுத்து, தலைமறைவான தஷ்வந்தை மும்பையில்போலீசார் கைது செய்தனர்.ஆனால்,சென்னைக்கு அழைத்து வர போலீசார் ஏற்பாடு செய்தபோது போலீசாரை தாக்கிவிட்டு தஷ்வந்த்தப்பியோடினான். இதையடுத்து, தப்பியோடிய தஷ்வந்த்தை பிடிக்க சிறப்பு தனிப்படை அமைத்து போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். ஆனால். தஷ்வந்த் தப்பி சென்ற இடத்திற்கு அருகில் உள்ள அந்தேரி என்னும் இடத்தில் பதுங்கி இருந்த அவரை மும்பை போலீசார் நேற்று கைது செய்தனர்.
இந்நிலையில், சிறுமி ஹாசினி, தனது தாயை கொலை செய்த வழக்கில் மும்பை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட தஷ்வந்திற்கு 3 நாள் போலீஸ் காவல் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார். மேலும், போலீஸ் காவல் முடிந்ததும் டிச.12ம் தேதி தஷ்வந்தை ஸ்ரீபெரும்புதூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தமும்பை நீதிமன்றம் உத்தரவிட்டது.
போலீஸ் காவல் வழங்கப்பட்டத்தை அடுத்து மும்பையிலிருந்து இன்றிரவு தஷ்வந்த் சென்னை அழைத்து வரப்படுகிறார்.