December 9, 2017 தண்டோரா குழு
ஓடிசாவில் ஆதார் அட்டையின் உதவியால் காணாமல் போன சிறுவன் மீண்டும் குடும்பத்தினருடன் சேர்ந்துள்ளான்.
ஒடிசாவில்,நெடுஞ்சாலையில் மனநலம் குன்றிய, சிறுவன் தனியே போய்கொண்டு இருப்பதை காவலர்கள் பார்த்துள்ளனர்.இதனையடுத்து அந்த சிறுவனை மீட்டு குழந்தைகள் காப்பகத்தில் தங்க வைத்தனர்.
இந்நிலையில்,அந்த சிறுவனின் பெற்றோர் யார் என்று கண்டுபிடிக்க, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் காவல்துறையினர், காணாமல்போன குழந்தை என்னும் தலைப்பின் கீழ், அந்த சிறுவனை குறித்து பல இடங்களில் விளம்பரம் செய்தனர். ஆனால், அந்த சிறுவனை தேடி யாரும் வரவில்லை.
இதையடுத்து,மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அமைச்சகம் மாவட்ட ஆதார் மையத்தின் உதவியை நாடினர். அந்த சிறுவனின் கைரேகையை சரிபார்த்த போது, அது ஜார்க்கண்ட் மாநிலத்தின் காந்திநகர் பகுதியை சேர்ந்த, சுரேஷ் குமார் மற்றும் மஞ்சு தேவியின் கைரேகையுடன் ஒத்திருப்பதை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். அதன் பிறகு,அந்த சிறுவனை அவனுடைய பெற்றோரிடம் காவல்துறையினர் ஒப்படைத்தனர்.
மேலும்,அந்த சிறுவனின் சிகிச்சிக்காக அம்மாவட்ட கலெக்டர் 1௦,௦௦௦ ரூபாயை வழங்கினார். காணாமல் போன எங்கள் மகன்,மீண்டும் எங்களுக்கு கிடைப்பான் என்ற நம்பிக்கையை இழந்திருந்த நிலையில் ஆதார் அட்டையின் உதவியுடன், எங்கள் மகன் எங்களுக்கு திரும்ப கிடைத்தான்.