December 11, 2017
tamilsamayam.com
‘ரோசாப்பூ’ என்ற மலையாள படத்தில் நடிகை அஞ்சலி, விபச்சாரி கேரக்டரில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது.
ஆந்திராவில் பிறந்து வளர்ந்த அஞ்சலி ‘கற்றது தமிழ்’ படம் மூலம் தமிழில் அறிமுகமானார். அடுத்ததாக ‘அங்காடி தெரு’ படத்தில் நடித்தார். பின்னர் தமிழ் மற்றும் தெலுங்கில் பல படங்களில் நடித்து தேசிய விருதுகளை வாங்கியுள்ளார். தமிழ் சினிமாவில் தொடர்ந்து தரமான படங்களாக பார்த்து நடித்து வந்தார் அஞ்சலி. தமிழில் மார்க்கெட் அவ்வளவாக இல்லை என்பதால் நடிகை அஞ்சலி மலையாள சினிமாவில் காலடி எடுத்து வைத்தார்.
தற்போது நடிகை அஞ்சலி மலையாளத்தில் ‘ரோசாப்பூ’ என்ற படத்தில் நடித்துள்ளார், இப்படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளிவந்தது. இந்தப் படத்தில் நடிகை அஞ்சலி விபச்சாரியாக நடித்துள்ளதாக படத்தின் டிரைலரில் தெரிகிறது. தற்போது அஞ்சலி நடித்த ‘ரோசாப்பூ’ படத்தின் டிரைலர் தான் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றது.