December 11, 2017 தண்டோரா குழு
கோவையில்,கந்து வட்டி கும்பல் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பெண் ஒருவர் குடும்பத்துடன் கோவை மாவட்ட ஆட்சியரிடம் இன்று(டிச 11) மனு அளித்துள்ளார்.
கோவை மாவட்டம் துடியலூர் பகுதியில் வசித்து வருபவர் மகேஸ்வரி. இவரது கணவர் ராம்குமார் அதே பகுதியில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார்.குடும்ப தேவைக்காக கடந்த 2014 ஆம் ஆண்டு ஐந்து லட்சம் ரூபாயை, நூற்றுக்கு ரூ 2.50 வட்டி விகிதத்தில் இரத்தினபுரியைச் சேர்ந்த ஆனந்தகுமார் மற்றும் மகேஸ்வரி தம்பதியிடம் வாங்கியுள்ளனர்.
அதற்காக அடமான பத்திரம் பதிவு செய்ய வேண்டும் என கூறி கையெழுத்து வாங்கிய அவர்கள் முப்பது லட்ச ரூபாய் கடன் வாங்கியதற்கான அடமான பாத்திரம்,மற்றும் பச்சை, வெள்ளைத்தாளில் கையெழுத்து பெற்றுள்ளனர்.
மேலும் யூகோ மற்றும் யூனியன் பேங்க் ஆப் இந்தியா வங்கியின் கையெழுத்திட்ட காசோலைகள், ஆல்டோ காரின் ஆர் சி புத்தகம் உள்ளிட்டவற்றை மிரட்டி வாங்கிய அக்கும்பல் மாதம் ஒன்றுக்கு ரூபாய் 12,500 வீதம் வட்டியாகவும் வசூலித்து வந்துள்ளது.
இந்நிலையில்,ஐந்து லட்சம் ரூபாய்க்கு,தற்போது 15 சதவிகிதம் வட்டி கேட்டு மிரட்டுவதாகவும் கொடுக்க முடியாது என மறுத்ததால் வீட்டின் மாடியில் குடியிருந்தவர்களை அப்புறப்படுத்தி விட்டு அவரது ஆட்களை குடி வைத்து வாடகை வாங்கி வருவதாகவும் கூறி பாதிக்கப்பட்ட மகேஸ்வரி தனது குடும்பத்துடன் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளார்.
மேலும், கடனாக வாங்கிய ஐந்து லட்சம் ரூபாய்க்கு 16 லட்சம் ரூபாய் வட்டி கட்டிய பின்பும் மேலும் பணம் கேட்டு கோவையில்,கந்து வட்டி கும்பல் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பெண் ஒருவர் குடும்பத்துடன் கோவை மாவட்ட ஆட்சியரிடம் இன்று(டிச 11) மனு அளித்துள்ளார்.
கோவை மாவட்டம் துடியலூர் பகுதியில் வசித்து வருபவர் மகேஸ்வரி. இவரது கணவர் ராம்குமார் அதே பகுதியில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார்.குடும்ப தேவைக்காக கடந்த 2014 ஆம் ஆண்டு ஐந்து லட்சம் ரூபாயை, நூற்றுக்கு ரூ 2.50 வட்டி விகிதத்தில் இரத்தினபுரியைச் சேர்ந்த ஆனந்தகுமார் மற்றும் மகேஸ்வரி தம்பதியிடம் வாங்கியுள்ளனர்.
அதற்காக அடமான பத்திரம் பதிவு செய்ய வேண்டும் என கூறி கையெழுத்து வாங்கிய அவர்கள் முப்பது லட்ச ரூபாய் கடன் வாங்கியதற்கான அடமான பாத்திரம்,மற்றும் பச்சை, வெள்ளைத்தாளில் கையெழுத்து பெற்றுள்ளனர்.
மேலும் யூகோ மற்றும் யூனியன் பேங்க் ஆப் இந்தியா வங்கியின் கையெழுத்திட்ட காசோலைகள், ஆல்டோ காரின் ஆர் சி புத்தகம் உள்ளிட்டவற்றை மிரட்டி வாங்கிய அக்கும்பல் மாதம் ஒன்றுக்கு ரூபாய் 12,500 வீதம் வட்டியாகவும் வசூலித்து வந்துள்ளது.
இந்நிலையில்கொலைமிரட்டல் விடுப்பதாகவும்,வீட்டை அவர் பெயரில் எழுதி வைக்கவில்லை என்றால் காரை ஏற்றி கொலை செய்து விடுவதாக மிரட்டுவதாகவும் குற்றம் சாட்டினார்.ஏற்கனவே கந்து வட்டி புகாரில் ஆனந்த குமார் மற்றும் மகேஸ்வரி கைது செய்யப்பட்டு தற்போது சிறையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.