December 11, 2017 தண்டோரா குழு
அணு ஆயுதம் ஒழிப்பிற்காக போராடி வரும் ICAN அமைப்பிற்கு, இந்த ஆண்டிற்கான அமைதிக்கான நோபல் பரிசு நேற்று(டிசம்பர் 1௦) வழங்கப்பட்டுள்ளது.
நார்வே நாட்டின் தலைநகரான ஆஸ்லோவின் நேற்று(டிசம்பர் 1௦)நடந்த நிகழ்ச்சியில் அணு ஆயுதம் ஒழிப்பிற்காக போராடி வரும் ICON அமைப்பிற்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. அந்த விருதை ICAN அமைப்பின் தலைவர்கள் பெற்றுக்கொண்டார்.
சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனிவா நகரை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் ICAN அமைப்பு கடந்த 2007ம் ஆண்டு தொடங்கப்பட்டது.இந்த அமைப்பில் சுமார் 101 நாடுகளை சேர்ந்த சுமார் 468 அமைப்புகள் உள்ளன.
மேலும், கடந்த ஜூலை மாதத்தில்,அணு ஆயுதங்களின் தடை மீதான ஒப்பந்தம் ஒன்றை ஐநா சம்பந்தத்துடன் அந்த அமைப்பு வெளியிட்டது. சுமார் 122 நாடுகள் அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். அதன் காரணமாக, இந்த அமைப்பிற்கு இவ்வாண்டின் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.