December 11, 2017 தண்டோரா குழு
விமானத்தில் வைன் தரமறுத்ததால், விமான ஊழியர்களுடன் பெண் பயணி ஒருவர் தகராறில் ஈடுப்பட்டதால், விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
ரஷ்ய நாட்டின் தலைநகரான மொஸ்கோவில் இருந்து சுவிட்சர்லாந்து நாட்டின் சூரிஸுக்கு 43 பயணிகளுடன் விமானம் பயணமானது.அந்த விமானத்தில்,ஸ்விட்சர்லாந்து நாட்டை சேர்ந்த 44 வயது பெண் பயணி பயணம் செய்தார். அந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகளுக்கு விமான ஊழியர்கள் வைன்(wine) வழங்கியுள்ளனர். ஆனால்,அந்த குறிப்பிட்ட பெண் பயணி மட்டும், மீண்டும் மீண்டும் வைன் கேட்டுள்ளார்.
இந்நிலையில் அவர் குடிபோதையில் இருப்பதை கண்ட ஊழியர்கள், வைன் தர மறுத்துள்ளார். உடனே, கோபம் அடைந்த அந்த பெண் பயணி, தகராறில் ஈடுபட்டுள்ளார். இது குறித்து,விமானிக்கு தகவல் தரப்பட்டது.இதனையடுத்து ஜெர்மன் நாட்டின் விமான கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்து,அவசரமாக விமானம் தரையிரக்கப்பட்டது.
இதனையடுத்து,ஜெர்மனி நாட்டின் ஸ்டுகார்ட் சர்வதேச விமானநிலையத்தில் விமானம் தரையிறங்கியது. விமானத்தில் தகராறில் ஈடுப்பட்ட பயணியை விமானத்திலிருந்து கீழே இறக்கி, விமானநிலைய காவல்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.அந்த பயணியை கைது செய்த அவர்கள், அவருக்கு சுமார் 5,௦௦௦யூரோஸ்($5,871) அபராதம் விதித்தனர்.