December 11, 2017 தண்டோரா குழு
இந்தியாவின் புகழ்பெற்ற விஞ்ஞானி லால்ஜி சிங் வாரணாசியில் நேற்று(டிச 1௦) காலமானார்.
இந்தியாவின் புகழ்பெற்ற விஞ்ஞானி மற்றும் “Father of DNA FingerPrinting” என்று அழைக்கப்பட லால்ஜி சிங்(70) நேற்று காலமானார்.
லால்ஜி சிங் வாரணாசியில் உள்ள பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தர் ஆவார்.லால்ஜி சிங் வாரணாசியிலுள்ள லால் பகதூர் விமானநிலையத்தில் இருந்து புதுதில்லி செல்ல இருந்தார். அப்போது அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது.உடனடியாக அவரை அருகிலிருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அங்கு செல்வதற்குள் அவருடைய உயிர் பிரிந்துவிட்டது.
லால்ஜி சிங் மறைவுக்கு உ.பி முதலமைச்சர் இரங்கல் தெரிவித்துள்ளார்.அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்”லால்ஜி சிங் மறைவால், நம் நாடு ஒரு புகழ்பெற்ற விஞ்ஞானி மற்றும் ஒரு ஒப்பற்ற ஆசிரியரை இழந்துவிட்டது” என்று தெரிவித்துள்ளார்.