December 12, 2017
tamilsamayam.com
சூப்பர் ஸ்டார் ரஜினி பிறந்தநாளை ஸ்பெஷலாக, காலா படத்தின் இரண்டாவது லுக் போஸ்டரை தனுஷ் வெளியிட்டார்.
ரஜினி நடிப்பில் தனுஷ் தயாரிப்பில் பா.ரஞ்சித் இயக்கும் படம் காலா. ரஜினியின் மருமகனும் நடிகருமான தனுஷ் இந்தப் படத்தைத் தயாரித்து வருகிறார்.
மும்பையைப் பின்னணியாகக் கொண்டு எடுக்கப்படும் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சில மாதங்களுக்கு முன் வெளியாகி அனைவரிடமும் நல்ல வரவேற்பைப் பெற்றது.
வயதான தோற்றத்தில், தாதா போன்று காட்சியளிக்கும் அந்தப் போஸ்டரில் கரிகாலன் என்று குறிப்பிடப்பட்டு இருந்ததால், தமிழர் ஒருவரின் நிஜக்கதையை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டு இருக்கலாம் என்ற வதந்திகள் வந்தன.
இந்நிலையில் ரஜினிகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு காலா படத்தின் செகன்ட் லுக் போஸ்டரை தனுஷ் தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.