December 12, 2017 தண்டோரா குழு
தற்போதைய சூழ்நிலையில் பேரறிவாளனை விடுவிக்கவோ, தண்டனையை குறைக்கவோ முடியாது என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 26 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் தன்னை விடுவிக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இவ்வழக்கு விசாரணை இன்று நடைப்பெற்றது.அப்போது பேரறிவாளனை விடுவிக்க சிபிஐ தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து உச்சநீதிமன்றம் தற்போதைய சூழலில் பேரறிவாளனை விடுவிக்க முடியாது. பேட்டரி குறித்து தியாகராஜனின் பிரமாண பத்திரத்திற்கு மத்திய அரசின் பதில் என்ன? ராஜிவ் கொலை வழக்கை சிபிஐ, சிறப்பு புலனாய்வு குழு முதலில் இருந்து விசாரிக்கலாம். இக்குழுவின் அறிக்கையை பேரறிவாளனுக்கு வழங்க உத்தரவிட்டது. மேலும்,பேரறிவாளன் தொடர்ந்த வழக்கின் விசாரணையை உச்ச நீதிமன்றம் 2018 ஜனவரி 26ம் தேதிக்கு ஒத்திவைத்தது.