• Download mobile app
30 Nov 2024, SaturdayEdition - 3216
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

சங்கர் சிந்திய ரத்தத்துக்கு நீதி கிடைத்துள்ளது- கவுசல்யா பேட்டி

December 12, 2017 தண்டோரா குழு

சங்கர் சிந்திய ரத்தத்துக்கு நீதி கிடைத்துள்ளது என்று அவரது மனைவி கவுசல்யா கூறியுள்ளார்.

நாட்டையே உலுக்கிய உடுமலை சங்கர் ஆணவக் கொலை வழக்கில் கவுசல்யா தந்தை உட்பட 6 பேருக்கு தூக்குத் தண்டனை திருப்பூர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியது. கவுசல்யாவின் தாய் அன்னலட்சுமி, மாமா பாண்டித்துரை மற்றும் பிரசன்னா ஆகியோர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் நீதுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய கவுசல்யா,

சாதி வெறியர்களுக்கு இந்த தீர்ப்பு அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.இந்த தீர்ப்பு நீதித்துறையின் மீது எனக்கு மிகுந்த நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. நீதித்துறையின் மீது நான் வைத்திருந்த நம்பிக்கை வீண் போகவில்லை. குற்றவாளிகளுக்கு வழங்கப்பட்ட தீர்ப்புக்கு நான் வரவேற்கிறேன். தாய் அன்னலட்சுமி, பாண்டிதுரை, பிரசன்ன குமார் விடுதலையை எதிர்த்து மேல் முறையீடு செய்வேன். சங்கர் சிந்திய ரத்தத்திற்கு நீதி கிடைத்துள்ளது என்று கவுசல்யா கூறினார்.

மேலும் படிக்க