December 12, 2017 தண்டோரா குழு
மாணவி ஜிஷா கொலை வழக்கில் கைதான அசாம் வாலிபர் அம்ரூல் இஸ்லாம் குற்றவாளி என்று எர்ணாகுளம் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கேரள மாநிலம் பெரும்பாவூரை ஊரைச் சேர்ந்தவர் சட்டக்கல்லூரி மாணவி ஜிஷா. இவர் கடந்த ஏப்ரல் மாதம் 28-ம் தேதி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டார்.
இச்சம்பவம் கேரள மட்டுமின்றி நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.இதையடுத்து, கொலை வழக்கு தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்ட கேரள போலீசார் சென்னையை அடுத்த காஞ்சிபுரத்தில் பதுங்கி இருந்த கட்டிட தொழிலாளி அம்ரூல் இஸ்லாமலை கைது செய்தனர்.
பின்னர், எர்ணாகுளம் முதன்மை செஷன்ஸ் நீதிமன்றத்தில் ஒன்றரை ஆண்டாக நடைபெற்று வந்த வழக்கு விசாரணையில் இன்று அம்ரூல் இஸ்லாம் குற்றவாளி என்று எர்ணாகுளம் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இதனையடுத்து,அம்ரூல் இஸ்லாம் காண தண்டனை விவரங்கள் நாளை அறிவிக்கப்படும் என்று நீதிபதி தெரிவித்துள்ளார்.