• Download mobile app
29 Nov 2024, FridayEdition - 3215
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தன் சொந்த நாட்டிற்கு திரும்பிய உலக கவனத்தை ஈர்த்த சர்பட் குலா

December 14, 2017 தண்டோரா குழு

உலகின் பிரபல ‘National Geographic’ இதழின் அட்டை படத்தால், உலகையே கவர்ந்த அகதிப் பெண் சர்பட் குலா, தனது சொந்த நாடான ஆப்கானிஸ்தான் திரும்பினார்.

கடந்த 30 ஆண்டுகளுக்கு முன், ஆப்கானிஸ்தானில் சோவியத் யூனியன் நடத்திய வான்வழி தாகுதலில் அந்நாட்டை சேர்ந்த பல உயிரிழந்தனர். பலர் அந்த நாட்டை விட்டு வெளியேறினர். அந்த தாக்குதலின்போது, சுமார் 6 வயது சிறுமியான குலா, தன் பெற்றோரை இழந்தாள். அதன்பிறகு, தன் 3 சகோதரிகள், ஒரு சகோதரர் மற்றும் பாட்டியுடன் சேர்ந்து நடைபயணமாக பாகிஸ்தான் நாட்டில் அகதியாக குடியேறினார். கடந்த 1984ம் ஆண்டு,அமெரிக்க புகைப்படகாரர் எடுத்த புகைப்படம் National Geographic இதழின் அட்டையில் வெளியானது. பச்சை நிற கண்களால் உலகிலுள்ள அனைவரின் கவனத்தையும் ஈர்த்த குலாவுக்கு, அப்போது வயது 12. அதன்பிறகு, தன் கணவருடனும், 4 குழந்தைகளுடனும் பாகிஸ்தான் நாட்டிலேயே தங்கிவிட்டார்.

இந்நிலையில்,கணவரின் மரணத்திற்குபிறகு, குலாவுக்கும் அவருடைய 2 மகன்களுக்கும் போலி Computerised National Identity Card(CNIC) தரப்பட்டது என்று புகார் எழும்பியது. இதையடுத்து, கடந்த 2௦15ம் ஆண்டு,அவர் கைது செய்யப்பட்டார். அந்த வழக்கை விசாரித்த நீதிபதி, அவருக்கு 14 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் 3000 முதல் 5000 டாலர்கள் அபராதமும் விதித்தார்.

இதையடுத்து, “தனக்கு நான்கு குழந்தைகள் உள்ளனர்; அவர்களை கவனித்துகொள்ள வேண்டும். மேலும் தான் ‘Hepatitis C’என்னும் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதால் சிகிச்சை பெற வேண்டும்” என்று அந்த தீர்ப்பை எதிர்த்து வாதம் செய்தார் குலா. உலகின் பல்வேறு அமைப்புகளும் அவருக்கு ஆதரவாக குரல் கொடுத்தனர்.

இதன்பின்னர் அவரின் உடல்நிலையையும், குழந்தைகளின் எதிர்காலத்தையும் கருத்தில் கொண்டு அவரின் சொந்த நாடான ஆப்கானிஸ்தானுக்கு திரும்பி செல்லநீதிமன்றம் அனுமதி வழங்கியது. மேலும், அரசு சார்பாக 3000 சதுர அடி பரப்பளவில் சொந்தமாக வீடும் மற்றும் மாதம் 700 டாலர் நிதியுதவி அவருக்கு வழங்குவதாக பாகிஸ்தான் செய்திதொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

தனது 45வது வயதில், ஆப்கானிஸ்தான் நாட்டிற்கு திரும்பிய குலாவை அந்நாட்டின் குடியரசு தலைவர் வரவேற்று, அவருக்கு வழங்கப்பட்ட வீட்டின் சாவியை வழங்கி, அவருடைய குழந்தைகளுக்கு கல்வி மற்றும் சுகாதாரபராமரிப்பு வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க