• Download mobile app
30 Nov 2024, SaturdayEdition - 3216
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

மத்திய அமைச்சர் பயணம் செய்த விமானம் தாமதமானத்தால், 3 ஊழியர்கள் பணி நீக்கம்

December 14, 2017 தண்டோரா குழு

மத்திய அமைச்சர் சென்ற ஏர் இந்திய விமானம் தாமதமாக புறப்பட்டதால், அந்த நிறுவனத்தின் 3 ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்திய தலைநகரான புதுதில்லியில் இருந்து ஆந்திர மாநிலத்தின் விஜயவாடாவிற்கு AI 459, சிவில் விமானம் மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் அசோக் கஜப்பதி ராஜு உள்ளிட்ட 125 பயணிகளுடன் புறப்படதயாராக இருந்தது. ஆனால், அந்த விமானத்தின் ஓட்டுநர் வர தாமதமானதால், விமானம் சரியான நேரத்தில் புறப்பட்டவில்லை. சுமார் ஒரு மணி நேரத்திற்கு பிறகும், விமானம் புறப்படாததால், பொறுமை இழந்த பயணிகள் கோபமடைந்தனர். சிலர் அமைச்சரிடம், இது குறித்து நடவடிக்கை எடுக்கும்படி அவரை வலியுறுத்தினர். உடனே அவரும், ஏர் இந்திய நிறுவனத்தின் புதிய தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர்பிரதீப் கரோலாவை, விமானத்தில் இருந்தபடியே தனது கைபேசி மூலம் தொடர்புக்கொண்டு நிலையை விளக்கியுள்ளார்.

அமைச்சரிடம் இருந்து வந்த தகவலை அறிந்த அவர், உடனே மூத்த தலைவர்களுடன் ஆலோசனை நடத்திய பிறகு, அந்த நிறுவனத்தின் 3 ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளார். விமானத்தை இயக்க சரியான நேரத்திற்கு வராத விமான ஓட்டுநருக்கு எச்சரிக்கை கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

இது குறித்து புதுதில்லி விமானநிலையத்தின் அதிகாரி கூறும்போதும்,

காலை 6 மணிக்கு விமானத்தை இயக்க வானிலை சீராக இல்லாத காரணத்தால், சிறிது நேரம் கழித்து, புறப்பட முடிவு செய்யப்பட்டது.
இது குறித்து, விமான ஊழியர்களுக்கு சரியான தகவல் கிடைக்காத காரணத்தால், அவர்கள் மத்திய அமைச்சரையும் பயணிகளையும் விமானத்தில் ஏறி அமர செய்துள்ளனர். விமானநிலையத்திற்கு வந்த விமான ஓட்டுநரின் ஏர்போர்ட் பாஸில் இருந்த ஏதோவொரு பிரச்சனையால், அவரை விமானநிலைய பாதுகாப்பு அதிகாரிகள் தடுத்து நிறுத்தியுள்ளனர். இதனால், அவர் விமானத்திற்கு வர மேலும் தாமதம் ஆகியுள்ளது” எனக் கூறினார்.

மேலும் படிக்க