December 15, 2017 தண்டோரா குழு
சர்தார் வல்லபாய் பட்டேலின் நினைவு நாளை தினத்தையொட்டி, இந்திய பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டரில் அஞ்சலி செலுத்தியுள்ளார்.
இந்திய நாட்டின் பெருந்தலைவர்களில் ஒருவரான சர்தார் வல்லபாய் பட்டேலின் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. சுதந்திர இந்தியாவின் முதல் துணை பிரதமராக பதவி வகித்தார். அதோடு இந்தியாவின் முதல் உள்துறை அமைச்சராகவும் பணியாற்றினார்.
கடந்த 195௦ம் ஆண்டு டிசம்பர் 15ம் தேதி,‘இரும்பு மனிதர்’ என்று போற்றப்பட்ட அவர், தனது 75வது வயதில் காலமானார்.
இந்நிலையில், அவருடைய நினைவு நாளையொட்டி இந்திய பிரதமர் நரேந்திர மோடி, தனது ட்விட்டரில் “பெருந்தலைவர் சர்தார் வல்லபாய் பட்டேல் மறைந்த தினத்தில் அவரை நினைவுகூர்வோம். தேசத்திற்காக அவர் ஆற்றிய முக்கிய பணிக்கு, ஒவ்வொரு இந்தியனும் கடமைப்பட்டுள்ளோம்” என்று பதிவிட்டு இருந்தார்.
இந்தியாவின் சிறு சிறு மாநிலங்களை ஒன்றாக இணைத்து, நாட்டின் ஐக்கியப்படுத்தியத்தில், பட்டேல் முக்கிய பங்கு வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.