• Download mobile app
30 Nov 2024, SaturdayEdition - 3216
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

சென்னையில் போக்குவரத்து தொழிலாளர்கள் திடீர் சாலை மறியல் பஸ் கண்ணாடி உடைப்பு

December 15, 2017 தண்டோரா குழு

தொழிற்சங்க நிர்வாகிகளின் போராட்ட வாபஸ் அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து, போக்குவரத்து ஊழியர்கள் பல்லவன் இல்லம் அருகே சாலை மறியல் ஈடுபட்டுள்ளனர்.

ஊதிய உயர்வு, ஓய்வூதியப் பலன்கள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் 8 மண்டலங்களுக்கு உட்பட்ட போக்குவரத்துக் கழக ஊழியர்கள் நேற்று முதல் 48 மணி நேரக் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக சென்னையில் உள்ள பல்லவன் இல்லத்தில் 3 ஆயிரத்துக்கு மேற்பட்ட ஊழியர்கள் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது, கோவிந்தா முழக்கத்துடன் சிங்கியடித்து அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டம் தொடர்பாக இன்று பேச்சுவார்த்தை நடைபெற்றது. பேச்சுவார்த்தைக்கு பிறகு காத்திருப்பு போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெறுவதாக தொழிற்சங்க நிர்வாகிகள் அறிவித்தனர். போராட்டம் ஒத்திவைப்பு என்கிற தொழிற்சங்கங்களின் அறிவிப்புக்கு தொழிலாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும் வரை போராட்டத்தை தொடர வேண்டும் என்று தொழிலாளர்கள் வலியுறுத்தி

போராட்டம் தொடர்பான கருத்து வேறுபாட்டால் தொழிலாளர்கள் இடையே கைகலப்பு பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சனையை தீர்க்கலாம் என்கிற நிர்வாகிகள் அறிவிப்புக்கு தொழிலாளர்கள் எதிர்ப்பு பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும் வரை போராட்டத்தை தொடர வேண்டும் என்று தொழிலாளர்கள் வலியுறுத்தினர்.

மேலும், நிர்வாகிகளை பேச விடாமல் தொழிலாளர்கள் தொடர்ந்து முழக்கமிட்டு காத்திருப்பு போராட்டம் ஒத்திவைப்பு என்கிற நிர்வாகிகள் உத்தரவை ஏற்க முடியாது என்று தொழிலாளர்கள் தொழிற்சங்க கொடிகளை உடைத்து எறிந்தும், பல்லவன் இல்லம் வழியாக வந்த பேருந்துகள் மீது கல்வீசியும், அங்கிருந்த நாற்காலிகளை உடைத்தும் ரகளையில் ஈடுபட்டனர். பல்லவன் இல்லம் பகுதியில் போக்குவரத்து தொழிலாளர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
பல்லவன் இல்லம் பகுதியில் சாலை மறியல் காரணமாக போக்குவரத்து கடும் பாதிக்கப்பட்டது.

மேலும் படிக்க