• Download mobile app
19 Apr 2025, SaturdayEdition - 3356
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

மூக்கைத் திரும்ப பெற 12 ஆண்டுகள் காத்திருந்த சிறுவன்.

July 5, 2016 தண்டோரா குழு

ஒரு மாத குழந்தையாய் இருந்த போது அருண் பட்டேல் என்பவருக்குத் தவறான மருத்துவ சிகிச்சையால் காணாமல் போன மூக்கை தற்போது 12 வயதில் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை மூலம் மருத்துவர்கள் திரும்ப பொருத்தியுள்ளனர்.

இந்தியாவின் மத்திய பிரதேஷ் மாநிலத்தில் உள்ள இந்தூர் என்னும் இடத்தில் மருத்துவர்கள் 12 வயது சிறுவனுக்கு அரிய பிளாஸ்டிக் அறுவை சிகிச்சையை வெற்றிகரமாகச் செய்து முடித்துள்ளனர்.

சிறுவனது நெற்றியில் மூக்கை மறுகட்டமைப்பு செய்து பின்னர், அதை அவரது முகத்தில் மூக்கு இருக்கும் அசல் இடத்தில் பதிய வைத்து சாதனை படைத்துள்ளனர்.

உஜ்ஜைன் மாவட்டத்தைச் சேர்ந்த 12 வயது சிறுவன் அருண் படேல் ஒரு மாத குழந்தையாக இருந்த போது தவறாக செலுத்தப்பட்ட ஊசியின் பக்க விளைவால் அவரது மூக்கு காணாமல் போய்விட்டது.

எனவே இழந்த மூக்கைத் திரும்பி பெற அவரது நெற்றியில் மூக்கின் வடிவம் மறுகட்டமைப்பு செய்யப்பட்டு, அதன் பின்னர் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சையின் வாயிலாக மூக்கு அதன் சரியான இடத்தில் பொருத்தப்பட்டது.

மேலும், சிறுவனுக்கு இந்த அரிய பிளாஸ்டிக் அறுவை சிகிச்சையை செய்த டாக்டர் தாஸ் கூறுகையில், இந்த அறுவை சிகிச்சையில் ஒரு தனிப்பட்ட முறையைக் கையாளப்பட்டதாகவும், முதலில் சிறுவனின் நெற்றியில் மூக்கு புனரமைக்கப்பட்ட பின்னர் அவரது முகத்தில் அதன் சரியான இடத்தில் பொருத்தப்பட்டதாகவும் தெரிவித்தார்.

மேலும், இந்த அறுவை சிகிச்சை நான்கு கட்டங்களாக நிகழ்த்தப்பட்டது என்றும் அந்த அறுவை சிகிச்சைக்கு சுமார் ஒரு வருடம் எடுத்துக் கொண்டதாகவும், அந்தச் சிகிச்சை தற்போது சமீபத்தில் தான் வெற்றிகரமாக நிறைவு பெற்றது என்றும் தெரிவித்தார்.

மேலும் படிக்க