• Download mobile app
30 Nov 2024, SaturdayEdition - 3216
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஆர்.கே.நகர் தொகுதி யாருக்கு? ஓட்டுப்பதிவு துவங்கியது

December 21, 2017 தண்டோரா குழு

ஆர்.கே.நகர் தொகுதிக்கான வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகிறது.

சென்னை ஆர்.கே. நகர் தொகுதியில் திமுக சார்பில் மருதுகனேஷ், அதிமுக சார்பில் மதுசூதனன், பாஜக சார்பில் கரு.நாகராஜன், டிடிவி தினகரன் உள்ளிட்ட சுயேட்சைகள் போட்டியிடுகின்றனர்.
இதையடுத்து, ஆர்.கே.நகர் தொகுதிக்கான வாக்குப்பதிவு காலை 8 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகிறது.

காலை எட்டு மணிக்கு வாக்குப்பதிவு துவங்கிய நிலையில் காலை ஏழு மணி முதலே ஏராளமானோர் வாக்குச் சாவடி மையங்களுக்கு வரத் தொடங்கினர்.ஏராளமான ஆண்களும், பெண்களும், இளைஞர்களும், இளம் பெண்களும் ஆர்வத்துடன் தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர்.தி.மு.க வேட்பாளர் மருதுகணேஷ் பழைய வண்ணாரப்பேட்டையில் உள்ள வாக்குச் சாவடியில் தனது குடும்பத்துடன் சென்று வாக்களித்தார்.

மேலும், ஆர்.கே.நகரில் மொத்தம் 258 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு வாக்குச் சாவடிக்கும் ஒரு உதவி ஆய்வாளர் தலைமையில் ஐந்து காவலர்கள் பாதுகாப்பு பணியில் உள்ளனர். இவர்கள் தவிர துணை ராணுவப்படை வீரர்களும் வாக்குச் சாவடி மையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அதைபோல் ஆர்.கே.நகர் முழுவதும் 3300 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். துணை ராணுவப்படையினரும் சுமார் 950 பேர் குவிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் படிக்க