December 22, 2017
தண்டோரா குழு
தமிழ், மலையாளம் என மொழியிலும் பிஸியாக இருந்து வருகிறார் அமலா பால். தற்போது அவர் அரவிந்த்சாமியுடன் இணைந்து நடித்துள்ள ‘பாஸ்கர் தி ராஸ்கல்’ படம் விரைவில் வெளிவரவுள்ளது.
இதையடுத்து விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக சின்ட்ரெல்லா படத்தில் நடிக்க இருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது. ராம் குமார் என்பவர் இயக்க இருக்கிறார். இதனை தொடர்ந்து அமலாபால் நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் தெலுங்கு படத்தில் நடிக்கிறார்.
‘ஆயுஸ் மான்பவ’ என்று பெயரிடப்பட்டிருக்கும் இப்படம் காதல் கதையாக உருவாக இருக்கிறது. இதில் அமலாபால் முஸ்லிம் பெண்ணாக நடிக்க இருக்கிறார். புதிய இயக்குனர் சரண் தேஜ் என்பவர் இயக்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.