December 22, 2017
தண்டோரா குழு
மிகவும் புகழ்பெற்ற திரைப்பட இணையத்தளமான ஐஎம்டிபி (IMDb-Internet movie Database) நிறுவனம் 2017-ல் வெளிவந்த படங்களில் சிறந்த 10 இந்தியப் படங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.
தமிழ் சினிமாவில் இந்த வருடம் பல படங்கள் வெளியாகி இருந்தன, அதில் ஒரு சில படங்கள் மட்டுமே ஒட்டு மொத்த உலகையும் ரசிக்க வைத்து கொண்டாட வைத்தன. அந்த வகையில், தளபதி விஜயின் மெர்சல், தல அஜித்தின் விவேகம், பாகுபலி-2. விக்ரம் வேதா போன்ற படங்கள் உலகம் முழுவதும் பிரம்மாண்ட வரவேற்பை பெற்றன.
இந்தப் பட்டியலில் மிகப்பெரிய பொருட்செலவில் எடுக்கப்பட்ட பாகுபலி 2 படத்தைப் பின்னுக்குத் தள்ளி விஜய் சேதுபதி, மாதவன் நடித்த விக்ரம் வேதா திரைப்படம் முதலிடத்தைப் பிடித்துள்ளது.
விஜய் நடிப்பில் வெளியான மெர்சல் திரைப்படம் 9-வது இடத்தைப் இடத்தைப் பிடித்து தமிழ்த் திரையுலகிற்கு மேலும் பெருமை சேர்த்துள்ளது.ஆனால் ஷாருக்கான் மற்றும் சல்மான் கான் நடிப்பில் வெளியான படங்கள் வியாபார ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஐஎம்டிபி வெளியிட்ட சிறந்த 10 படங்கள்
1. விக்ரம் வேதா
2. பாகுபலி 2
3. அர்ஜூன் ரெட்டி
4. சீக்ரெட் சூப்பர்ஸ்டார்
5. ஹிந்தி மீடியம்
6. தி காஸி அட்டாக்
7. டாய்லெட் ஏக் பிரேம் கதா
8. ஜாலி எல்எல்பி 2
9. மெர்சல்
10. தி கிரேட் ஃபாதர்