December 22, 2017 தண்டோரா குழு
மகாராஷ்டிராவில் கடலுக்கு அடியில் செல்லும் புல்லட் ரயில் திட்டம் அடுத்த ஆண்டு தொடங்கப்படவுள்ளது.
இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே புல்லட் ரயில் திட்டத்தை,கடந்த செப்டம்பர் மாதம் தொடங்கி வைத்தனர்.அதன்படி, மகாராஷ்டிரா மாநிலத்தின் தலைநகரான மும்பையிலிருந்து குஜராத் மாநிலத்தின் அகமதாபாத் நகரை இணைக்கும் புல்லட் ரயில் திட்டம் விரைவில் நடைமுறைப்படுத்த உள்ளது.
இந்த புல்லட் ரயில் பாதையின் சிறப்பு என்னவென்றால், இது கடலுக்கு அடியில் பயணம்
செய்யும்.இந்த திட்டத்தின் மூலம், கடலுக்கு அடியில் பயணம் செய்யும் முதல் புல்லட் ரயில் ஆகும். இந்த ரயில் மணிக்கு சுமார் 350 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும். மேலும், 21 கிலோமீட்டர் நீளம் உள்ள சுரங்கப்பாதையில்,7 கிலோமீட்டர் தூரம் தண்ணீருக்குள் இருக்கும்.
இந்த ரயில்வே சுரங்க பாதை அமைக்கும் பணி அடுத்த ஆண்டு தொடங்கி, வரும் 2022ம் ஆண்டு, நிறைவடையும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.