• Download mobile app
23 Nov 2024, SaturdayEdition - 3209
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

நட்புக்காக உயிர் துறந்த முஸ்லீம் மாணவன்.

July 6, 2016 தண்டோரா குழு

பங்களாதேஷ்ன் தலைநகரான டாக்காவில் ஹோலெய் அர்டிசன் பேக்கரியில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் 20 பேர் இறந்தனர்.

அயல் நாட்டினரைக் கொல்ல வேண்டும் என்ற வெறியோடு செயல்பட்ட தீவிரவாதிகள் ஒவ்வொருவரையும் குரானின் சில பகுதிகளை ஒப்புவிக்க வைத்து முஸ்லீம் அல்லாதாரை சித்திரவதை செய்து கொன்றதும் அறிந்ததே.

ஏழு ஜப்பானியத் தொழிலாளர்கள், ஒரு இந்திய மாணவன், ஒன்பது இத்தாலிய வியாபாரிகள், இரண்டு காவல்துறையினர் ஆகியோர் இத்தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளனர். 30 பேர் காயமடைந்துள்ளனர். அதிரடிப் படையினர் 13 பிணைக் கைதிகளைக் காப்பாற்றியதோடு, 6 தீவிரவாதிகளைக் கொன்று, ஒருவனைச் சிறைபிடித்தனர்.

இதற்கு முன் ஒரு பெண்மணி தான் இஸ்லாம் இனத்தைச் சேர்ந்தவர் என்று வெளிப்படுத்தாததால் மரணமடைந்தார். மற்றுமொரு மாணவன் தன் நண்பர்களுக்காக உயிர்த் தியாகம் செய்துள்ளார்.

ஃபராஸ் அயாஸ் ஹொசைன் அமெரிக்காவின் அட்லான்டாவில் உள்ள எமொர்ய் பல்கலைக்கழகத்தில் படிப்பவர். கோடை விடுமுறையைக் கழிக்க தனது இரு நண்பர்களுடன் பங்களாதேஷ்க்கு வந்துள்ளார். ஹோலெய் அர்டிசன் பேக்கரிக்கு அமெரிக்கப் பிரஜையான அபின்ட கபிர், மற்றும் இந்தியப் பிரஜையான டரிஷி ஜைன் ஆகியோருடன் சென்றுள்ளார்.

ஹொசைன்யுடைய நண்பர்கள் அயல் நாட்டவர்கள் என்பதை அறிந்து கொண்ட தீவிரவாதிகள், ஹொசைனை மட்டும் தப்பியோடும்படிக் கூறியுள்ளனர். ஆனால் தனது நண்பர்களைத் துன்பத்தில் நட்டாற்றில் விட மறுத்த ஹுசைன் தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு இரையானார். ஹொசைனின் மருமகனான ஹிஷான் கூறும் போது நட்புக்காக உயிரைத் துறந்த வீரன் என்று பாராட்டியுள்ளார்.

ஹொசைனுடைய வீரமும், சுயநலமின்மையும் அடுத்த தலைமுறையினருக்கு ஒரு முன்னோடி என்று பங்களாதேஷின் நாளிதழ் டாக்கா ட்ரிபுனெ புகழ்ந்துள்ளது. மனித நேயமே இல்லாத கொடூர மனமுடையக் கொலையாளிகளுக்கு மத்தியில் இது போன்ற பிறருக்காக வாழும் மனிதர்களைக் கொண்டதற்காகப் பெருமைப்படுவதாகவும் பத்திரிகை தெரிவித்துள்ளது.

மகனைப் பிரிந்த வேதனையும் துக்கமும் பெற்றோருக்கு அதிகம் இருந்தாலும், மகனின் நேய நோக்கு அவர்களைக் கர்வம் அடையச் செய்யும் என்றும், உண்மையான இஸ்லாமியனாக வளர்த்தோம் என்று தலை நிமிரச் செய்யும் என்றும் நாளிதழின தலையங்கம் எழுதியுள்ளன.

இத்தகைய சுயநலமற்ற, இஸ்லாமிய மதத்தின் உண்மைக் கருத்தை வெளிப்படுத்தி உலகுக்கு உணர்த்திய நாயகன் பங்களாதேஷின் பிரஜை என்பது பெருமைக்குரிய விஷயம் என்றும் பிரசுரித்துள்ளது.

தன்னைப் பாதுகாத்துக் கொள்வதா அல்லது நண்பர்களுடன் சேர்ந்து மரணத்தைத் தழுவிக்கொள்வதா என்ற இக்கட்டான நிலையில் தீர்மானம் எடுப்பது மிகவும் கடினம்.

இது போன்ற ஒரு நிலை எவருக்கும் வரக் கூடாது என்று கிரிக்கெட் வர்ணனையாளர் ஹர்ஷா பொக்லெ தனது முகநூலில் பதிவு செய்துள்ளார்.

தன் உயிரைக் காத்துக் கொள்ள வாய்ப்பு இருந்தும் நண்பர்களுக்காக, உயிரைத் தியாகம் செய்த மனிதரை வணங்குகிறோம் என்று பாகிஸ்தானைச் சேர்ந்த எழுத்தாளர் பதித்துள்ளார். இந்திய மக்களும் ஹுசைன்னுக்கு பாராட்டு தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க