December 26, 2017 தண்டோரா குழு
உ.பியில் முன்னாள் மருத்துவ மாணவர்கள் சந்திப்பு விழாவின்போது, ஆம்புலன்ஸ் வாகனத்தில் மது பாட்டில்களை எடுத்து வந்தது மற்றும் ரஷ்ய பெல்லி நடனம்(Belly Dance) இடம்பெற்ற சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
உத்தர் பிரதேஷ் மாநிலத்தின் மீரட் நகரிலுள்ள லாலா லாஜ்பத் ராய் மருத்துவக் கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நேற்று(டிச 25) நடைபெற்றது.இந்த விழாவில் கடந்த 1992ம் ஆண்டு படித்த மாணவர்கள் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சிக்காக, மருத்துவமனையின் ஆம்புலன்ஸ் மூலம் மதுபாட்டிகள் கொண்ட பெட்டிகள் கொண்டு வரப்பட்டு, மருத்துவமனை வளாகத்தில் விநியோகிக்கப்பட்டது.மேலும் ரஷ்ய நாட்டின் பெல்லி நடனமும் நடைபெற்ற சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மேலும்,இச்சம்பவத்திற்கு Indian Medical Association (IMA) கண்டனம் தெரிவித்துள்ளது. அதேபோல், தவறு செய்த மருத்துவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.