December 27, 2017 தண்டோரா குழு
உ.பியில் உள்ள சுகாதார நிலையத்தில் மின்சாரம் இல்லாத காரணத்தால், டார்ச் லைட் உதவியுடம் சுமார் 32 பேருக்கு கண் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சி அளித்துள்ளது.
உத்தர பிரதேசத்தின் நவாப்கஞ்ச் பகுதியில் சமூக சுகாதார மையம் ஒன்று செயல்பட்டு வருகிறது. அந்த சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக நோயாளிகள் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், மின்சாரம் இல்லாத சூழ்நிலையில், சுமார் 32 பேருக்கு டார்ச் லைட் உதவியுடன் மருத்துவர்கள் கண் அறுவை சிகிச்சை செய்துள்ளனர்.
மேலும்,கண் அறுவை சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு துணையாக இருக்க, எங்களுக்கு சரியான படுக்கை வசதி செய்து தரப்படவில்லை. குளிர் அதிகமாக இருக்கும் நேரத்திலும், நாங்கள் தரையில் படுக்கவேண்டியுள்ளது” என்று நோயாளிகளின் உறவினர்கள் புகார் அளித்தனர்.
இதனையடுத்து, இச்சம்பவம் குறித்து விசாரிக்க தலைமை மருத்துவ அதிகாரி உத்தரவிட்டுள்ளார். விசாரணையின் முடிவில், தவறு செய்த மருத்துவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.