• Download mobile app
30 Nov 2024, SaturdayEdition - 3216
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஆண் போல் நடித்து 3 பெண்களை திருமணம் செய்த பெண் கைது !

December 27, 2017 தண்டோரா குழு

ஆந்திராவில் ஆண் என்று கூறி மூன்று பெண்களை திருமணம் செய்த பெண்னை போலீசார் கைது செய்துள்ளனர்.

ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டத்தில் உள்ள ஜம்மலமடுகு அருகில் உள்ள இடிகலபாடு கிராமத்தை சேர்ந்தவர் ரமாதேவி (18). இவர் சென்னையில் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருகிறார். ராமதேவி நடை-உடை-பாவனைகளில் தன்னை ஆண் போல காட்டிக் கொண்டு கடந்த இரண்டு ஆண்டுகளில் 2 பெண்களை மோசடியாக திருமணம் செய்து கொண்டார். ஒவ்வொரு முறையும் திருமணம் முடிந்த உடன், தனக்கு அவசர வேலைகள் உள்ளதாகவும், விரைவில் சென்னையில் வீடு பார்த்து அழைத்து செல்ல சென்று குடிவைப்பதாகவும் கூறி சென்று விடுவாராம். ஆனால் ரமாதேவி திரும்பி வந்ததே இல்லையாம்.

இந்நிலையில், மூன்றாவதாக ஓடு நூற்பாலையில் வேலை செய்து 17 வயது சிறுமியிடம் நட்பாக பழகியுள்ளார். பின்னர், இரண்டு மாதங்களுக்கு முன்பு அந்த சிறுமியை திருமணமும் செய்துள்ளார். வழக்கம் திருமணமாக இரண்டே நாட்களில் ரமாதேவி பணி நிமித்தமாக வெளியூர் செல்வதாகக் கூறியுள்ளார். இதனால் சந்தேகமடைந்த சிறுமி, தனது பெற்றோருக்கு நடந்த விவரங்களை கூறியுள்ளார்.

இதையடுத்து, ஆண்வேடமிட்டவரைத் தொடர்பு கொண்ட பெற்றோர், ஊரில் திருவிழா இருப்பதாக கூறி ஊருக்கு வரும்படி அழைப்பு விடுத்தனர். இதனையடுத்து, நேற்று ஜம்மலமடகு கிராமத்திற்கு வந்த அவரைப் போலீசார் பிடித்து விசாரித்தனர். அப்போது, அவர் ஆண் வேடமிட்ட பெண் என்பதை அறிந்து அதிர்ச்சியடைந்தனர்.

இதுதொடர்பான புகாரின் பேரில் போலீசார் நடத்திய முதல்கட்ட விசாரணையில் அவர் ஆணாக நடித்தது இது முதன்முறையல்ல என்பதும் தெரியவந்தது. அனந்தபூர் மாவட்டத்தைச் சேர்ந்த சிறுமி ஒருவரையும், ஜம்மலமடகு பகுதியைச் சேர்ந்த மற்றொரு சிறுமியையும் ஏற்கனவே திருமணம் செய்து கொண்டது தெரியவந்தது.

இருப்பினும் பணம், நகைக்காகவா இவ்வாறு செய்தாரா? அல்லது பெண்களை ஏமாற்றி திருமணம் செய்து பாலியல் குற்ற சம்பவங்களுக்கு பயன்படுத்த திட்டமிட்டரா என்ற கோணத்தில் போலீசார் விசாரனை செய்து வருகின்றனர். ஒரு பெண்னே ஆணாக நடித்து மூன்று பெண்களை ஏமாற்றி திருமணம் செய்து கொண்ட சம்பவம் கடப்பாவில் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

மூன்றாவதாக திருமணம் செய்து கொண்ட நிர்மலா, ஆண் என்று தன்னை ஏமாற்றி ரமாதேவி மோசடியாக திருமணம் செய்து கொண்டார் என்று ஜம்மல்மடுகு காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரை பெற்ற போலீசார் ரமாதேவியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் படிக்க