December 27, 2017 தண்டோரா குழு
நவீன இந்தியாவில் பெண்களுக்கு எதிராக குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு தான் வருகிறது. இருப்பினும் அவ்வபோது பாதுக்கப்பு நடவடிக்கைகள் எடுக்கபட்டு தான் வருகிறது.
இந்நிலையில், நாட்டின் 6 மெட்ரோ நகரங்களில் பெண்கள் பாதுகாப்பாக இருக்கும் பட்டியலை மத்திய குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்டுள்ளது.இதில், பெண்களுக்கு எதிரான குற்றங்களின் எண்ணிக்கையில் டெல்லி முதலிடத்தில் உள்ளது. பெண்களுக்கு எதிராக மிக மோசமான சம்பவங்கள் நடைபெறும் நகராக தலைநகர் டெல்லி உள்ளது. 75.8 லட்சம் பெண்கள் வசிக்கும் டெல்லியில் பெண்களுக்கு எதிராக 13,808 குற்ற வழக்குகள் பதிவு செய்யபட்டுள்ளது. மேலும், டெல்லியில் வசிக்கும் ஒரு லட்சம் பெண்களில் 182பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதைபோல் நாட்டின் 6 மெட்ரோ நகரங்களில் பெண்களின் பாதுகாப்பில் சென்னை முதலிடம் பிடித்துள்ளது. சென்னையில் தான் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறைவாக உள்ளதாக மத்திய குற்ற ஆவணக் காப்பகம் தெரிவித்துள்ளது. 43 லட்சம் பெண்கள் வசிக்கும் சென்னையில் பெண்களுக்கு எதிரான 544 குற்றங்கள் வழக்கு பதிவு செய்யப்படுள்ளது.சென்னையில் வசிக்கும் ஒரு லட்சம் பெண்களில் 12பேர் தான் பாதிக்கப்படுவதாக புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.