December 30, 2017
kalakkalcinema.com
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சூர்யா தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் தானா சேர்ந்த கூட்டம் படத்தில் கீர்த்தி சுரேசுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார்.
பொங்கலுக்கு வெளியாக உள்ள இந்த படம் ரசிகர்களிடையே மிக பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது, இதனையடுத்து தற்போது இந்த படத்தின் புதிய அப்டேட்டை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
இன்று படத்தின் அடுத்த பாடலை இன்று வெளியிட உள்ளது, பின்னர் முழு ஆல்பம் ஜனவரி 3-ம் தேதி வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இதனால் ரசிகர்கள் கொண்டாட தயாராகி வருகின்றனர்.