December 30, 2017 தண்டோரா குழு
பெங்களூரில் அரசு மருத்துவமனையில், புத்தாண்டு அன்று பிறக்கும் முதல் பெண் குழந்தைக்கு இலவச கல்வி வழங்கப்படும் என்று அந்நகரின் மேயர் அறிவித்துள்ளார்.
பெண் சிசு கொலை மற்ற நாடுகளை காட்டிலும் இந்தியாவில் அதிகமாக காணப்படுகிறது. பெண் குழந்தை பிறந்தால், குடும்பத்திற்கு சுமையாக பார்க்கப்படுகிறார்கள். அவர்களுடைய கல்வி, திருமணத்திற்கான வரதட்சனை ஆகிய காரணங்களை காட்டி, அவர்களை வளர்க்க பல பெற்றோர்கள் விரும்புவதில்லை. கருவில் இருக்கும் பிஞ்சு குழந்தைகளை கருவிலேயே அளித்து விடுகின்றனர். பெண் சிசு கொலை தென் இந்தியாவை காட்டிலும் வட இந்தியாவில் அதிகமாக உள்ளது.
இந்நிலையில், கர்நாடக மாநிலத்தின் தலைநகரான பெங்களூரில், வரும் புத்தாண்டில் சுகப்பிரசவம் மூலம் பிறக்கும் முதல் பெண் குழந்தைக்கு அதன் பட்டப்படிப்பு வரை இலவச கல்வி வழங்கப்படும் என்று மேயர் அறிவித்துள்ளார்.
மேலும்,பிறந்த குழந்தையின் வங்கி கணக்கில் சுமார் 5 லட்சம் ருபாய் சேமித்து வைக்கப்படும். அந்த சேமிப்பு கணக்கின் வட்டி அவளுடைய கல்விக்கு பயன்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.