December 30, 2017
தண்டோரா குழு
கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமானவர் நடிகை ஓவியா. இதன் மூலம் இந்த வருடத்தில் ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆதரவைப் பெற்ற நாயகிகளில் ஒருவராகவும் ஓவியா திகழ்கிறார்.
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ஓவியா தனது சம்பளத்தை உயர்த்தி நிறைய பட வாய்புகள் குவிகிறது. இது தவிர அவர் பல்வேறு விளம்பரப் படங்களில் நடிப்பது என மிகவும் பிஸியாக நடித்து வருகிறார். அதைபோல் இந்த வருடம் ரசிகர்களால் சமூக வலைத்தளத்தில் அதிக பார்க்கப்பட்ட பாடல் ‘ஜிமிக்கி கம்மல்’ . மோகன்லால் நடித்த ‘வெளிப்பாடிண்டே புஸ்தகம்’ படத்தில் இடம்பெற்ற அந்தப் பாடலுக்கு கேரளாவைச் சேர்ந்த ஷெரில் எனும் ஆசிரியை தனது குழுவினருடன் ஆடியது செம ட்ரெண்ட் ஆனது.
இந்நிலையில், பிரபல ஜவுளி கடை விளம்பரப் படத்திற்காக அந்தப் பாடலின் இசைக்கு ஓவியா நடனம் ஆடியுள்ளார். தற்போது ஓவியாவின் ஜிமிக்கி கம்மல் டான்ஸ் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.