December 30, 2017
தண்டோரா குழு
தமிழில் மெட்ராஸ்,கபாலி ஒருநாள் கூத்து உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை ரித்விக்கா. தற்போது பல்வேறு படங்களில் நடித்து வருகிறார். தற்போது அவர் தமிழ்நாட்டின் முதல் பெண் முதலமைச்சர் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார். நடிகையும் தமிழ்நாட்டின் முதல் பெண் முதலமைச்சருமான ஜானகியின் வாழ்க்கை வரலாறு படத்தை இயக்குனர் பாலகிருஷ்ணன் இயக்கவுள்ளார்.
இப்படத்தில் ஜானகி கதாபாத்திரத்தில் நடிகை ரித்விக்கா நடிக்கவுள்ளார்.மேலும், இப்படத்தில் நடிப்பது எனக்கு கிடைத்த பாக்கியம் என்று ரித்விக்கா கூறியுள்ளார். படத்தின் சூட்டிங் பிப்ரவரியில் துவங்கவுள்ளது.தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் மனைவியான ஜானகி 24 நாட்கள் தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்துள்ளார் என்பது குறிப்படத்தக்கது.