January 2, 2018 தண்டோரா குழு
புத்தாண்டையொட்டி தமிழகத்தில் 211 கோடி ரூபாய்க்கு மேல் மதுவிற்பனை நடைபெற்றிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
புத்தாண்டை பலரும் நேற்று(ஜன 2) சிறப்பாக கொண்டாடினர்.அந்த வகையில் டிசம்பர் 31-ந்தேதி பிற்பகல் 3 மணி முதல் களை கட்ட தொடங்கிய மதுவிற்பனை, நேரம் செல்ல செல்ல அதிகரித்தது. புத்தாண்டு கொண்டாட்டத்தின் மூலம் ரூ.211 கோடிக்கு மது விற்பனை ஆகியுள்ளதாகவும் 31ஆம் தேதி அன்று ரூ.117 கோடி அளவிலும் ஜனவரி 1ஆம்தேதியன்று ரூ.94 கோடி அளவிலும் மது விற்பனை நடந்துள்ளதாக டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், கடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில் மதுபானங்களின் விலை 10% முதல் 12% வரை அதிகரித்த போதிலும், ரூ.36 கோடிக்கு கூடுதல் விற்பனையாகியுள்ளது.
டிசம்பர் 31ஆம் தேதி மற்றும் புத்தாண்டையொட்டி 200 கோடி ரூபாய்க்கு மதுவிற்பனை செய்ய டாஸ்மாக் நிர்வாகத்தினர் திட்டமிட்டிருந்ததாக கூறப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.