January 2, 2018 தண்டோரா குழு
ஆன்லைன் மூலம் விற்கப்படும் அனைத்து பொருள்களின் விவரங்களும் கட்டாயம் அச்சிடப்பட்ட வேண்டும் என்ற உத்தரவு நேற்று(ஜன 1) முதல் அமலுக்கு வந்தது.
இ-காமர்ஸ் நிறுவனங்கள் தாங்கள் விற்பனை செய்யும் பொருட்களின் எம்ஆர்பி விலையை மட்டும் அச்சிடாமல், அந்த பொருளின் காலாவதியாகும் தேதி மற்றும் வாடிக்கையாளர் பராமரிப்பு விவரங்கள் போன்ற தகவல்களையும் கட்டாயம் அச்சிட வேண்டும் என்று மத்திய நுகர்வோர் நல அமைச்சகம் அறிவித்துள்ளது.
கடந்த 2017ம் ஆண்டு ஜூன் மாதம்,நுகர்வோர் விவகார அமைச்சகம், சட்டரீதியான விதிகள் தொடர்பாக புதிய திருத்தங்களை செய்துள்ளது. இதையடுத்து, இ-காமர்ஸ் மேடையில் எம்ஆர்பிக்கு அடுத்ததாக, அந்த பொருள் உற்பத்தி செய்யப்பட்ட தேதி, அதன் காலாவதி தேதி, நிகர அளவு, தயாரிக்கப்பட்ட நாடு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு விவரங்களை காட்ட வேண்டும்.இந்த உத்தரவு நேற்று(ஜன 1) முதல் அமலுக்கு வந்தது.